தபங் 3 கதை

  தபங் 3 இயக்குனர் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை இப்படத்தின் நாயகன் சல்மான் கான் தயாரிப்பாளராக தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் பாலிவுட் நாயகி சோனாக்ஷி நாயகியாக நடிக்கவுள்ளார்.

  தபங் 3 படத்தின் கதை

  சுல்புல் பாண்டே (சல்மான் கான்) ஒரு போலீஸ் அதிகாரியாக முதல் இரண்டு பங்கங்களை போல் நகைச்சுவையாகவும், அதிரடியாகவும் வருகிறார். வழக்கம் போல் இவரது தம்பியை தொல்லை செய்வது, மனைவியுடன் கொஞ்சுவது, நகைச்சுவையாகவும் அக்கறையாகவும் காவலர்களுடன் பழகி வருகிறார்.

  விபச்சாரத்திற்காக பெண்களை கடத்தி ஒரு கும்பல் செல்ல, அதனை அறிந்த போலீஸ் அதிகாரி சல்மான் கான் அவர்களை அந்த கும்பலிடம் இருந்து காப்பாற்றுகிறது. இதனால் அந்த கும்பலுக்கு தலைவனாக இருக்கும் சுதீப் சல்மான் கான்-யை பழிவாங்க துடிக்கிறார்.

  ஒரு நாள் எதிர்பாராமல் சுதீப் மற்றும் சல்மான் கான் இருவரும் சந்திக்கின்றனர். அப்போது ஒரு பிளாஷ் பேக் கதை தொடர்கிறது. சல்மான் கான் சிறுவயதில், சுதீப் ஒரு துரோகம் செய்துள்ளார். பின் சல்மான் கான் கடந்த கால பகைக்காகவும், இப்போது சுதீப் செய்து வரும் தொழிலிற்காகவும் பழிவாங்குவதே இப்படத்தின் கதை.

  **Note:Hey! Would you like to share the story of the movie தபங் 3 with us? Please send it to us (popcorn@oneindia.co.in).