டாடா இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ், பாக்கியராஜ் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் அம்பேத் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.
ஒரு குடும்ப படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் எழில் அரசு ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் கதிரேஷ் அழகேசன் எடிட்டிங் செய்துள்ளார்.
இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படம் 2023 பிப் 10ல் திரையரங்கில் வெளியாகியது.
டாடா திரைப்படத்தின் கதை
மணிகண்டன் (கவின்) எந்த ஒரு கவலையும் இல்லாமல் ஜாலியாக சுற்றித்திரியும் இளைஞர். இவருக்கும் சிந்து (அபர்ணா தாஸ்) இடையே காதல் மலர்கிறது. ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் அபர்ணா தாயாகிறார்.
குழந்தையை கலைத்துவிடலாம் என கவின் கூற, அதற்கு மறுப்பு தெரிவித்து குழந்தை பெற்றெடுக்கிறார், அபர்ணா. ஆனால் கவின் பொறுப்போடு இல்லாத காரணத்தால், குழந்தையை கவின்யிடம் ஒப்படைத்துவிட்டு தன் தாய் வீட்டுக்கு சென்று விடுகிறார், அபர்ணா.
கவின் அந்த குழந்தையை பார்த்துக்கொண்டு தானும் பொறுப்பாக மாறுகிறார். தனியாளாக அந்த குழந்தையை வளர்த்து வரும் கவினும் அபர்ணாவும் இணைந்தார்களா என்பதே படத்தின் கதை.