தங்கல் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் அமீர் கான், சாக்ஷி தன்வார், பாத்திமா சனா ஷைக் மற்றும் பலர் நடித்த அதிரடி குடும்ப திரைப்படம். இப்படத்தினை அமீர் கான், கிரண் ராவ், சித்தார்த் ரோய் கபூர் ஆகியோர் தயரித்துள்ளனர்.
கதை :
முன்னாள் மல்யுத்த வீரர் (மஹாவீர் சிங் போகத்) அமீர் கான் இந்தியாவிற்காக மல்யுத்தத்தில் தங்க பதக்கத்தை வாங்கி தர நினைத்தார். அனால், அவரால் முடியவில்லை அதனால், தன்னால் முடியாததை தன் மகன் மூலம் நிறைவேற்ற வேண்டும் என்று ஆசைப்பட்ட அவர்க்கு தொடர்ந்து நன்கு பெண் குழந்தைகளே பிறந்தனர்.
அது அவருக்கு சோகத்தை அளிக்க, ஒரு கட்டத்தில் தன் குழந்தைகளின் செயலை பார்த்து, தன் மகள்களாலும் தன்னுடைய ஆசையை நிறைவேற்ற முடியும் என்று புரிந்து கொண்டு தனது இரு மகள்களுக்கு மல்யுத்த பயிற்சி அளிக்கிறார்.
கீதா மற்றும் பபிதா இருவரும் மல்யுத்த விளையாட்டு போட்டிகளில் பயிற்சி பெறுகின்றனர். இறுதியில் அவர்கள் தங்களது தந்தையின் ஆசையை நிறைவேற்றினரா ? இந்திய அளவில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் பங்கேற்றனரா? என்பதே மீதிக்கதை.