இந்த படத்தை இயக்குனர் சூர்யன் ஜி இயக்கியுள்ளார், ஒளிப்பதிவு ஆத்தியா கோவிந்த்ராஜ் கையாண்டுள்ளார், இசை ஸ்ரிநாத் இசையமைத்துள்ளார். தயாரிப்பாளர் எஸ். வி. பிரகாஷ் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
கதை
ஆதி மற்றும் யாமினி, உயிருக்கு உயிராக காதலித்துக் கொண்டிருக்கின்றார்கள். நல்லா போய்க் கொண்டிருந்த அவர்களது வாழ்க்கையில் யாமினி எதிர்பாராத விதமாக கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார். யாமினியின் இழப்பை தாங்க முடியாத ஆதி அவர்களது மெமரியை மொத்தமாக அழிக்க நினைக்கின்றார். யாமினியின் நினைவில் இருந்து வெளிவந்த ஆதி அவரது சிறுவயது தோழி புவி வுடன் இணைகிறார். சாதிக்கின் சூழ்சியில் புவியின் குடும்பம் மொத்தம் சிக்கி உள்ளது. ஆதி அவருடைய நினைவை திரும்பப் பெற்று அவருக்கு பிடித்த எல்லோரையும் காப்பாற்றுவாரா இல்லையா என்பதே இதன் கதை.
வெளியீட்டு தேதி
டெக்ஸ்டர் 14 மார்ச் 2025-ல் திரையரங்குகளில் வெளியானது.