twitter

    தாராள பிரபு கதை

    தாராள பிரபு இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், விவேக், தான்ய ஹோப் முக்கிய முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நகைச்சுவை மற்றும் காதல் திரைப்படம். இப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்கிரீன் சீன் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தினை தயாரிக்கிறது. இசையமைப்பாளர் பாரத் சங்கர் இப்படத்திற்கு பின்னணி இசையமைத்துள்ளார். 

    நகைச்சுவை படமாக உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் செல்வகுமார் எஸ் கே ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் க்ரிபாகரன் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் இணையத்தில் 2020 பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டு 2020 மார்ச் மாதம் 13ல் வெளியாகவுள்ளது.

    தாராள பிரபு படத்தின் தகவல்கள்

    இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், பாரத் சங்கர், இன்னா கெங்கா, காபிர் வாசுகி, மடலே ப்ளூஸ், ஊர்க்கா - தி பேண்ட், சீன் ரோல்டன், விவேக் -மெர்வின் என 8 இசையமைப்பாளர்கள் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    தாராள பிரபு திரைப்படம், 2012-ம் ஆண்டு ஹிந்தி திரைப்படமாக வெளியாகி வெற்றிப்பெற்ற 'விக்கி டோனர்' படத்தின் தமிழ் ரீமேக் படமாக உருவாகியுள்ளது. விக்கி டோனர் திரைப்படம் ஹிந்தியில் மாபெரும் வெற்றி பெற்று புகழ் பெற்றுள்ளது. இப்படத்தில் நடிகர் பத்மஸ்ரீ  'விவேக்' ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தாராள பிரபு படத்தின் நாயகியாக 'தடம்' படத்தில் நடித்து தமிழில் அறிமுகமான தன்யா ஹோப் இப்படத்தில் நடித்துள்ளார்.

    தாராள பிரபு படத்தின் கதை

    நடிகர் விவேக் ஒரு குழந்தை 'ஃபெர்ட்டிலிட்டி கிளினிக்' ஒன்றினை நிறுவி பணியாற்றி வருகிறார். இவர் கிளினிக் வரும் தம்பதியினர் ஏமாற்றத்துடனும், மன வருத்தத்துடனும் திருப்புகின்றனர். இதனால் கிளினிக் பற்றிய நம்பிக்கை மக்கள் மத்தியில் குறைய தொடங்குகிறது. இதனால் வருத்தமடையும் விவேக் தனது கிளினிக்கு ஒரு ஆரோக்கியமான ஒரு ஸ்பேர்ம் டோனர் தேவை என எண்ணுகிறார்.

    இப்படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யாண் வேலையில்லாத இளைஞராக உள்ளார். தனது தாயின் பியூட்டி பார்லர் கடையில் உள்ள வேலைகளை செய்து தனது தாய்க்கு உதவி செய்து வருகிறார். இவரை தனது கிளினிக்கு ஸ்பேர்ம் டோனராக பணியாற்ற நடிகர் விவேக் அணுகுகிறார். ஆனால் முதலில் தனது மறுப்பை தெரிவிக்கும் ஹரிஷ், பின்னர் குடும்ப சூழ்நிலை மற்றும் இந்த பனியின் மூலம் கிடைக்கும் அதிக தொகைக்கு ஆசைப்பட்டு இந்த பணிக்கு ஒப்புக்கொள்கிறார்.

    சில நாட்களில் வங்கியில் பணியாற்றும் நாயகி தான்யா ஹோப் உடன் அறிமுகம் கிடைக்கிறது. பின்னர் காதலில் விழும் இவர்கள் பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொள்கின்றனர். இவர்களின் திருமண வாழ்க்கையில் ஒரு குழந்தை தேவை என ஆசையை கொள்கிறார்கள். ஆனால் ஹரிஷ் கல்யாண் ஸ்பேர்ம் டோனராக இருந்ததால் இவர்களுக்கு சற்று கடினமான நிலை வருகிறது.

    இதற்காக மருத்துவமனைக்கு செல்கின்றனர் ஹரிஷ் மற்றும் தன்யா ஹோப், அங்கு ஹரிஷ் தனது உடலை சோதனை செய்ய தயங்குகிறார். பின்னர் வேறு வழியில்லாமல் நாயகியிடம் உண்மையை ஒப்புக்கொள்கிறார், ஹரிஷ் கல்யாண்.

    இதனால் ஆத்திரமடையும் நாயகி, நாயகனை விட்டு பிரிகிறார். இவரும் நாயகியுடன் சேர பல முயற்சிகள் எடுக்கிறார். தனது தாய், பாட்டி என அனைவராலும் வெறுக்கப்படும் ஹரிஷ், மனநிம்மதி இல்லாமல் அலைகிறார்.

    தீடிரென வருமான வரித்துறை ஹரிஷின் தாய் நடித்தி வரும் அந்த பியூட்டி பார்லர் கடையில் சோதனை நடத்தி ஒரு பெரிய தொகையினை கைப்பற்றுகிறது. இதனால் ஹரிஷ் கல்யானை போலீஸ் கைதி செய்கிறது. பின்னர் என்ன நடந்து என்பதே படத்தின் கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie தாராள பிரபு with us? Please send it to us ([email protected]).