எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்
(U/A) (2018)வகை
Black comedy
வெளியீட்டு தேதி
24 Aug 2018
கதை
எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் இயக்குனர் சர்ஜுன் கேஎம் இயக்கத்தில், சத்யராஜ், வரலக்ஷ்மி சரத்குமார், ஆடுகளம் கிஷோர், மற்றும் யோகி பாபு நடித்த அதிரடி த்ரில்லர் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பிலார் சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.
கதை :
தன் அக்காவை கொன்ற மாமனை நெஞ்சில் குத்திக் கொல்கிறான் 19 வயது இளைஞன் டேவிட் (கிஷோர்). இதை பார்க்கும் அக்கா மகன் தாமஸ் (விவேக் ராஜகோபால்), டேவிட்டை போலீசில் காட்டிக்கொடுக்கிறான். இதையடுத்து சிறையில் அடைக்கப்படும் டேவிட் 14 ஆண்டுகள் கழித்து வெளியே வரும்போது, அக்கா மகன் தாமஸ் பைக் திருடனாக மாறியிருக்கிறான். இளமையை ஜெயிலில் தொலைத்த விரக்தியில் இருக்கும் டேவிட், தன்னை பழிவாங்கதான் வந்திருக்கிறான் என நினைக்கிறான் தாமஸ்.
இருவரும் இணைந்து தொழிலதிபர் மகளான ஸ்வேதாவை (வரலட்சுமி) கடத்தி, அவரது தந்தையிடம் எட்டு கோடி ரூபாய் கேட்டு மிரட்டுகிறார்கள். இதனால் பயந்து போகும் வரலட்சுமியின் தந்தை ஓய்வுபெற்ற காவல் அதிகாரி நட்ராஜின் (சத்யராஜ்) உதவியை நாடுகிறார். இதயத்தில் ஓட்டையுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் தனது எட்டு வயது மகளை தனியாகவிட முடியாத நிலையில், வீட்டில் இருந்தபடியே கடத்தல்காரர்களை நெருங்கும் வேலையில் இறங்குகிறார். கடத்தல்காரர்கள் பிடிப்பட்டார்களா இல்லையா என்பது விறுவிறுப்பான மீதிக்கதை.
தொடர்பான செய்திகள்