X
தமிழ் » திரைப்படங்கள் » எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்
எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்

எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்

Black comedy | 24 Aug 2018 | U/A |
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் கதை

எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் இயக்குனர் சர்ஜுன் கேஎம் இயக்கத்தில், சத்யராஜ், வரலக்ஷ்மி சரத்குமார், ஆடுகளம் கிஷோர், மற்றும் யோகி பாபு நடித்த அதிரடி த்ரில்லர் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பிலார் சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். கதை : தன் அக்காவை கொன்ற மாமனை நெஞ்சில் குத்திக் கொல்கிறான் 19 வயது இளைஞன் டேவிட் (கிஷோர்). இதை பார்க்கும் அக்கா மகன் தாமஸ் (விவேக் ராஜகோபால்), டேவிட்டை போலீசில் காட்டிக்கொடுக்கிறான். இதையடுத்து சிறையில் அடைக்கப்படும் டேவிட் 14 ஆண்டுகள் கழித்து வெளியே வரும்போது, அக்கா மகன் தாமஸ் பைக் திருடனாக மாறியிருக்கிறான். இளமையை ஜெயிலில் தொலைத்த விரக்தியில் இருக்கும் டேவிட், தன்னை பழிவாங்கதான் வந்திருக்கிறான் என நினைக்கிறான் தாமஸ். இருவரும் இணைந்து தொழிலதிபர் மகளான ஸ்வேதாவை (வரலட்சுமி) கடத்தி, அவரது தந்தையிடம் எட்டு கோடி ரூபாய் கேட்டு மிரட்டுகிறார்கள். இதனால் பயந்து போகும் வரலட்சுமியின் தந்தை ஓய்வுபெற்ற காவல் அதிகாரி நட்ராஜின் (சத்யராஜ்) உதவியை நாடுகிறார். இதயத்தில் ஓட்டையுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் தனது எட்டு வயது மகளை தனியாகவிட முடியாத நிலையில், வீட்டில் இருந்தபடியே கடத்தல்காரர்களை நெருங்கும் வேலையில் இறங்குகிறார். கடத்தல்காரர்கள் பிடிப்பட்டார்களா இல்லையா என்பது விறுவிறுப்பான மீதிக்கதை.
Read More

எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் நடிகர்கள் & படக்குழுவினர்

எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் அணியின் தகவல்

இயக்குனர் சர்ஜுன் கேஎம்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
இரு திரில்லர் ஆக்ஷன் படத்துக்கு தேவையான சுவாரஸ்யமான திரைக்கதையை சிறப்பாக செய்திருக்கிறார் இயக்குனர் சர்ஜுன். யூடியூபில் டிரெண்டிங் ஆன லஷ்மி, மா குறும்படங்களை இயக்கிய அதே சர்ஜுன் தான். படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமரவைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதை பெருமளவுக்கு செய்தும் காட்டியிருக்கிறார். படத்தில் காமெடிக்காக யோகி பாபு. ஆனால் சிரிக்க தான் முடியவில்லை. முந்தைய படங்களில் மாஸ் காமெடி செய்த யோகி பாபுவா இது என நினைக்க வைக்கிறது. உங்கக்கிட்ட இருந்து இன்னும் எதிர்பார்க்கிறோம் 'ச்சைல்டு'. சுதர்சன் சீனிவாசனின் ஒளிப்பதிவும், விஜய் ஆதினாதனின் கலையும் படத்தை வேற லெவலக்கு கொண்டு சென்றிருக்கிறது. அதேபோல கார்த்திக் ஜோகேஷின் படத்தொகுப்பு படத்தை இம்மிபிசகவிடாமல், திரில்லிங் அனுபவத்தை தக்க வைத்திருக்கிறது. பாடல் காட்சியின் போதுகூட எழுந்துபோக மனம் வரவில்லை. ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி அழைத்த உடனேயே, அத்தனை காவல்துறையினரும் உடனடியாக வந்துவிடுவார்களா என்ன?. அதுவும் வீட்டில் அமர்ந்தபடி பத்து ஈசிஆரில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை எல்லாம் அலசி ஆராய்வது 'உஸ்ஸ்ஸ்ஸ்....' முடியல. க்ளைமாக்ஸ் காட்சியும் ஏதோ திணிக்கப்பட்டது போன்றே இருக்கிறது.

எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+