ஈட்டி தமிழ் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை ரவி அரசு இயக்க, வெற்றிமாறன் மற்றும்மைக்கல் ராயப்பன் தாயரித்துள்ள இத்திரைப்படத்தில் அதர்வா மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜி வி பிரகாஷ் குமார்.
கதை :
ஒரு சிறு காயம் பட்டாலும் உடலில் ரத்தம் அதிகமாக வெளியேறகூடிய நோயினால் பாதிக்கப்பட்ட புகழ் (அதரவா) சென்னையில் நடக்கவிருக்கும் தடகள போட்டியில் பங்குபெற முயற்சிக்கிறார். எதிர்பாரா விதமாக காயத்ரி (ஸ்ரீ திவ்யா) உடன் ஏற்படும் தவறான தொலைப்பேசி இணைப்பின் மூலம் நடப்பாகி பின் காதலாக மாறுகிறது. காயத்ரியை பார்க்க புகழ் தஞ்சாவூரிலிருந்து சென்னை வரும் போது காயத்ரியின் அண்ணன் ஒரு கொலைகார கும்பலால் தொரத்தப்படுகிறார். அவரை புகழ் காப்பாற்றியதன் விளைவாக அக்கும்பலுக்கு புகழ் எதிரியகிறார்.
பின்பு அக்கும்பலிடமிருந்து புகழ் எவ்வாறு தப்பிக்கிறார், அவரது தடகள போட்டியில் வென்றாரா..? என்பதே விறுவிறுப்பான கதையாக நகர்கின்றது.