எலக்சன் - (சேத்து மான்) புகழ் இயக்குனர் தமிழ் இயக்கத்தில் விஜய் குமார் நாயகனாக நடித்திருக்கும் அரசியல் திரைப்படம். இப்படத்தில் ப்ரீத்தி அஞ்சு அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, ஜார்ஜ் மரியன், பாவெல் நவகீதன் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தினை ரியல் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிக்க, இசையமைப்பாளர் கோவிந்த வசந்த இசையமைத்துள்ளார்.
அரசியல் கதைக்களம் உடைய அதிரடி படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் மஹேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிரேம் குமார் எடிட்டிங் செய்துள்ளார். ரியல் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தினை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் விநியோகம் செய்துள்ளது.
எலக்சன் திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துளளது. இப்படம் 2024 மே மாத 17ல் உலகமெங்கும் திரையரங்கில் வெளியாகிறது.
எலக்சன் திரைப்படத்தின் கதை
வேலூர் மாவட்ட ஊராட்சி கிராமத்தில் விஜய் குமார் தந்தையான ஜார்ஜ் மரியன் ஒரு அரசியல் கட்சியில் தொண்டராக தனது காலத்தை கழித்து வருகிறார். அந்த கட்சியில் தலைவராக இருக்கும் நபரின் மகன் அடுத்த தலைவராக பொறுப்பேற்கும் நிலையில், அதற்கு எதிராக பல குரல்கள் ஒலிக்கிறது. கட்சியின் மூத்த தொண்டனாக இருக்கும் ஜார்ஜ் மரியன் இந்த முறை தனக்கு சீட்டு ஒதுக்கும் படி தலைவரிடம் கேட்கிறார். அதற்கு பணம் இல்லை போன்ற காரணங்கள் சொல்லி சீட்டு கொடுக்க மறுக்கின்றனர்.
கட்சியில் தொண்டனாக இருக்கும் சில சமூகத்தினரை மதிக்காமல் இருக்கும் காரணத்தால் அந்த கட்சி இரு துருவங்களாக பிரிகிறது. இன்னும் எத்தனை காலம் தான் குடும்ப அரசியல் செய்து வருகின்றனர் என்று தேர்தலில் போட்டியிட முடிவு எடுக்கின்றனர். தலைவர் மகன் மற்றும் ஜார்ஜ் மரியன் மகனான விஜய் குமார் இருவரும் தேர்தல் களத்தில் மோதுகின்றனர். பின் என்ன நடக்கிறது என்பதே எலக்சன் திரைப்படத்தின் கதை.