எனை சுடும் பணி ராம் சேவா இயக்கிய அதிரடி திரைப்படம். இந்த படத்தில் நடராஜ் சுந்தர்ராஜ், பாக்யராஜ் மற்றும் உபாசனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர், மனோபாலா, கூல் சுரேஷ் மற்றும் தலைவாசல் விஜய் ஆகியோரின் முக்கியமான துணை வேடத்தில் நடித்துள்ளார்கள். மிக்கின் அருள்தேவ் இசையமைத்துள்ளார், சி.எம். இளங்கோவன் படத்தொகுப்பை செய்துள்ளார். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹேமலதா சுந்தர்ராஜ் தயாரித்த இந்த படம் SNS பிக்சர்ஸ் பதாகையின் கீழ் வெளியிடப்பட்டது.
கதை
நடராஜ் சுந்தர்ராஜ் மற்றும் உபாசனா ஆர்.சி. எளிமையான வாழ்க்கையை நடத்தும் ஒரு காதல் ஜோடி. உபாசனா ஒரு பொறுப்பான வேலை செய்யும் பெண், அதே நேரத்தில் நடராஜ் ஐ.பி.எஸ் தேர்வுக்கு படிப்பதில் கவனம் செலுத்துகிறார். இந்த நேரத்தில், பொள்ளாச்சியில் இளம் பெண்கள் காணாமல் போக, சாலையோரத்தில் ஒரு உடலை கண்டுபிடித்தை போலீஸ், நடராஜ் சுந்தர்ராஜ் மற்றும் உபாசனா மீது சந்தேகம் உருவானது. போலீசார் இந்த வழக்கில் ஆழமாக ஆராயும்போது, நடராஜும் உபாசனாவும் எதிர்பாராத விதமாக மர்மத்தில் சிக்கிக் கொள்கிறார்கள், இது அவர்களின் வாழ்க்கையின் போக்கையே முற்றிலும் மாற்றுகிறது.
வெளியிட்டு தேதி
எனை சுடும் பணி திரைப்படம் 2025 மார்ச் 21 அன்று திரையரங்குகளில் வெளியானது.