Tamil » Movies » Enakku Vaaitha Adimaigal » Story

எனக்கு வாய்த்த அடிமைகள்

வகை

Comedy, Romance

காலம்

2 hrs 15 mins

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

02 Feb 2017
கதை
எனக்கு வாய்த்த அடிமைகள் இயக்குனர் மகேந்திரன் ராஜமணி இயக்கத்தில், ஜெய், பிரணிதா, கருணாகரன், காளி வெங்கட், நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் நவீன் ஆகியோர் நடித்த நகைச்சுவை காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்க்கு இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி.

கதை :

ஜெய், கருணக்காரன், காளி வெங்கட் மற்றும் நவீன் ஜார்ஜ் தாமஸ் ஆகிய மூவரும் நண்பர்கள். வெவ்வேறு வேலைகளில் இருந்தாலும் இவர்களுக்குள் கருத்து வேறுபாடில்லாமல் இருக்கின்றனர். ஜெய் முதல் சந்திப்பிலே பிரணிதா மேல் காதல் கொள்கிறார். ஜெய் தன் காதலை கூற, ப்ரணிதா அதனை ஏற்க மறுக்கிறார். இதனால், மிகுந்த வேதனைக்குள்ளாகும் ஜெய், தன் நண்பர்களுக்கு தெரிந்தால் கேலி செய்வார்கள் என நினைத்து வேதனைக்குள்ளாகிறார்.

அவரின் மனஅழுத்தமும் யாரிடமும் பகிர விருப்பமின்மையும் அவரை தற்கொலைக்கு தள்ளுகிறது.  மறுபுறம் அவரின்அ மூன்று நண்பர்களையும் காவல்துறை கைது செய்கிறது. ஜெய் தன்னுடைய தற்கொலை செய்யும் முயற்சியிலிருந்து எவ்வாறு வெளிவந்தார். தன்னுடைய நண்பர்களை எவ்வாறு காப்பாற்றினார், ப்ரணிதா மேல் ஜெய்க்கு உள்ள காதல் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.