எங்க காட்டுல மழை இயக்குனர் ஸ்ரீ பாலாஜி இயக்கத்தில், மிதுன் மகேஸ்வரன், ஸ்ருதி ராமகிருஷ்ணன், அப்புக்குட்டி, அருள்தாஸ் மற்றும் பலர் நடித்த அதிரடி நகைச்சுவை திரைப்படம். இப்படத்திற்கு ஸ்ரீ விஜய் இசையமைத்துள்ளார்.
கதை :
மதுரையில் இருந்து சென்னைக்கு வரும் நாயகன் மிதுனுக்கு காரில் லிப்ட் கொடுக்கிறார் மற்றொரு மதுரைக்காரர். சொந்த ஊர் காரர் என்பால் வீட்டிலும் தங்குவதற்கு இடம் தருகிறார். வேலை வெட்டிக்கு போகாமல் சும்மாவே ஊர் சுற்றித்திரியும் மிதுனுக்கு ஸ்ருதி ராமகிருஷ்ணன் மீது காதல் மலர்கிறது. இதற்கிடையில் தனது ஊர்கார நண்பன் அப்புக்குட்டியை சந்திக்கிறார் மிதுன். இருவரும் சேர்ந்து பாசக்கார மதுரைக்காரன் வீட்டில் ஓசியில் வாழ்க்கையை என்ஜாய் செய்கிறார்கள்.
இதற்கிடையே பல கோடி ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை வெளிநாடு கடத்த திட்டமிடுகிறது உள்ளூர் ரவுடி கும்பல் ஒன்று. இதை மோப்பம் பிடிக்கும் பணச்தாசை பிடித்த கொடூர போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்தாஸ், அந்த கும்பலிடம் இருந்து பணத்தை அடிக்கிறார். ஆனால் அவரை ஏமாற்றி அதை தட்டிச் செல்கிறார் மிதுன். இதற்கடுத்து என்னாகிறது என்பது காமெடியாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீ பாலாஜி.