என்ன சத்தம் இந்த நேரம் 2014-ம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவை கலந்த திகில் படம். இப்படத்தை குரு ரமேஷ் இயக்க, ஏ வி அனூப் தயாரித்துள்ளார். முக்கிய கதாபாத்திரமாக அதிதி, ஆக்ரிதி, அக்ஷதி மற்றும் ஆப்தி இவர்களுடன் நிதின் சத்யா, எம் ராஜா, மானு, மற்றும் மாளவிகா வாலஸ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
கதை
இந்த படம் விலங்கியல் பூங்காவில் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத நான்கு குழந்தைகள் தொலைந்து விடுகிறார்கள். அக்காட்டில் பயங்கர உருவமுடைய பாம்பு அலைகின்றது. அக்குழந்தைகளை நிதின் சத்யா, உள்ளிட்ட அனைவரும் தேடி அலைகின்றனர்.
அப்பாம்பிடமிருந்து அக்குழந்தைகளை அனைவரும் காப்பற்றினரா? இல்லையா? அக்குழந்தைகளுக்கு என்ன ஆனது? என்பது உச்சகட்ட கதை