இட்டர்னல்ஸ் இயக்குனர் சோலி ஜாவோ இயக்கத்தில் மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் உருவாகி வெளியாகியுள்ள புதிய சூப்பர் ஹீரோ கதையம்சம் கொண்ட திரைப்படம். இப்படத்தினை மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் உறுப்பினர் கெவின் பெய்ஜ் மற்றும் நடே மூரே இணைந்து தயாரித்துள்ளனர்.
அதிரடி சாகசங்கள் உடன் மார்வெல் ரசிகர்களை கவரும் வகையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் பென் டேவிஸ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் கிரெய்க் வூட் மற்றும் டயலான் டிச்செனோர் இணைந்து எடிட்டிங் செய்துள்ளனர். இப்படத்திற்கு பிரபல ஹாலிவுட் திரைப்பட இசையமைப்பாளர் ராமின் டிஜவாடி இசையமைத்துள்ளார்.
மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படத்தினை வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் நிறுவனம் உலகம் முழுவதும் விநியோகம் செய்துள்ளது. இப்படம் 2021 நவம்பர் 4ல் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் நான்காம் கட்டத்தின் ஒரு பகுதியாக 5 நவம்பர் 2021 ஆம் தேதி வெளியாகியுள்ளது.
தி அவென்ஜ்ர்ஸ்: எண்ட் கேம் படத்திற்கு பின்னர் மார்வெல் ஃபேஸ் 04 தொடக்கத்தில் அறிமுகமும் புதிய சூப்பர் ஹீரோ நட்சத்திரங்கள் கொண்ட இப்படத்தில் ஏஞ்சலினா ஜூலி, ஜெம்மா சான், ரிச்சர்ட் மடடேன், குமைல் நஞ்சினி, லியா மேக்ஹுக், டான் லீ, ஹரிஷ் படேல், பாரி கியோகன், லாரன் ரிட்லோஆஃ என பலர் நடித்துள்ளனர்.
கதை
2019 ஆம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் திரைப்படத்தில் நடந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பல எதிர்பாராத மாற்றங்கள் நடந்துள்ளது. இப்படத்தில் 7,000 ஆண்டுகளுக்கும் மேலாக பூமியில் ரகசியமாக வாழ்ந்த விண்மீன்களால் உருவாக்கப்பட்ட ஒரு அழியாத அன்னிய இனம் தேவியண்ட்ஸ் என்ற தீய குணம் கொண்ட இனத்திடமிருந்து எப்படி மனிதகுலத்தை காப்பாற்றுகின்றனர் என்பதே கதை ஆகும்.