எதற்கும் துணிந்தவன் (ET) இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடி மற்றும் குடும்பத் திரைப்படம். இப்படத்தினை தமிழ் சினிமா பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்க, இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார்.
எதற்கும் துணிந்தவன் (ET) படத்தின் படக்குழு தகவல்களுக்கு
அதிரடி - திரில்லர் திரைக்கதையில் திரைப்பட ரசிகர்கள் குடுப்பங்களோடு ரசிக்கும் வண்ணத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ரூபென் எடிட்டிங் செய்துள்ளார். இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், வினை, சரண்யா பொன்வண்ணன் என பல திரைப்பட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
எதற்கும் துணிந்தவன் (ET) படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் என அணைத்து வீடியோக்கள்
எதற்கும் துணிந்தவன் (ET) திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மற்றும் ஹிந்தி மொழிகளில் உருவாகி ஒரு பாண் இந்தியா படமாக 2022 மார்ச் 10ல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
எதற்கும் துணிந்தவன் (ET) படத்தின் புகைப்படங்கள்
எதற்கும் துணிந்தவன் (ET) படத்தின் கதை
கதைக்கரு
வழக்கறிஞர் கண்ணபிரானாக சூர்யா நடித்துள்ளார். இளம் வயதிலேயே தனது தங்கையை சிலர் பலாத்காரம் செய்து விட அவரை காப்பாற்ற போராடி முடியாமல் போக தங்கையின் போட்டோவை சுவற்றில் மாட்டி சூர்யாவின் குடும்பமே சாமியாக கும்பிட்டு வருகிறது. பெண்களை ஆபாசமாக வீடியோ எடுக்கும் வினய்யின் வலையில் சூர்யாவே ஒரு கட்டத்தில் சிக்க அதிலிருந்து எப்படி தன்னையும், தனது குடும்பத்தையும் காப்பாற்றி பெண்களுக்கு அட்வைஸ் சொல்லும் படமாக எதற்கும் துணிந்தவன் அமைந்திருக்கிறது.
ரிலீஸ்
எதற்கும் துணிந்தவன் (ET) திரைப்படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவுப்பு சன் பிக்சர்ஸ் இணையத்தள ட்விட்டர் பக்கத்தில் 2020 அக்டோபர் 25ல் படக்குழு சார்பில் வெளியானது.
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் (ET) படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் கெய்ன்ட் மூவிஸ்' நிறுவனம் உலகம் முழுவதும் விநியோகம் செய்துள்ளது.
இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி-யும், ஓடிடி உரிமையை சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.