எழுமின் இயக்குனர் விபி விஜி இயக்கத்தில், விவேக், தேவயானி மற்றும் பலர் நடிக்கும் அதிரடி திரைப்படம்.
கதை :
தொழிலதிபர் விஸ்வநாதன் (விவேக்)- பாரதி (தேவயானி) தம்பதியின் ஒரே மகன் அர்ஜுன் (சுகேஷ்). குத்துச்சண்டையில் வல்லவனாக திகழும் அர்ஜுனை போற்றி வளர்க்கிறார்கள் விவேக்கும் தேவயானியும். அர்ஜுனின் ஏழை நண்பர்களான அஜய் (பிரவீண்), கவின் (ஸ்ரீஜித்), வினித் (வினித்), ஆதிரா (கிருத்திகா), சாரா (தீபிகா) ஆகியோரும் தற்காப்பு கலைகளில் வல்லவர்கள்.
ஆனால் இவர்களுக்கு தற்காப்பு கலையை தொடர்ந்து கற்க குடும்ப பொருளாதார சூழல் தடையாக இருக்கிறது. மகனின் ஆசைக்காக அவனது நண்பர்களின் விளையாட்டு செலவை ஏற்கிறார் விவேக். ஒருகட்டத்தில் மகனை இழந்து தவிக்கும் விவேக் - வேதயானி தம்பதிக்கு ஆறுதலாய் இருக்கிறார்கள் அர்ஜுனின் நண்பர்கள். அவர்களின் கனவை நனவாக்க போராடும் விவேக்குக்கு தடையாக வருகிறார் ஸ்போர்ட்ஸ் அகாதமி தலைவர் சுந்தரம் (அழகம்பெருமாள்). இதனை முறியடித்து தற்காப்பு கலையில் மாணவர்கள் ஐந்து பேரும் எப்படி சாதிக்கிறார்கள் என்பது தான் எழுமின் சொல்லும் செய்தி.