X
எழுமின்

எழுமின்

Action | 18 Oct 2018 | U |
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

எழுமின் கதை

எழுமின் இயக்குனர் விபி விஜி இயக்கத்தில், விவேக், தேவயானி மற்றும் பலர்  நடிக்கும் அதிரடி திரைப்படம். கதை :  தொழிலதிபர் விஸ்வநாதன் (விவேக்)- பாரதி (தேவயானி) தம்பதியின் ஒரே மகன் அர்ஜுன் (சுகேஷ்). குத்துச்சண்டையில் வல்லவனாக திகழும் அர்ஜுனை போற்றி வளர்க்கிறார்கள் விவேக்கும் தேவயானியும். அர்ஜுனின் ஏழை நண்பர்களான அஜய் (பிரவீண்), கவின் (ஸ்ரீஜித்), வினித் (வினித்), ஆதிரா (கிருத்திகா), சாரா (தீபிகா) ஆகியோரும் தற்காப்பு கலைகளில் வல்லவர்கள். ஆனால் இவர்களுக்கு தற்காப்பு கலையை தொடர்ந்து கற்க குடும்ப பொருளாதார சூழல் தடையாக இருக்கிறது. மகனின் ஆசைக்காக அவனது நண்பர்களின் விளையாட்டு செலவை ஏற்கிறார் விவேக். ஒருகட்டத்தில் மகனை இழந்து தவிக்கும் விவேக் - வேதயானி தம்பதிக்கு ஆறுதலாய் இருக்கிறார்கள் அர்ஜுனின் நண்பர்கள். அவர்களின் கனவை நனவாக்க போராடும் விவேக்குக்கு தடையாக வருகிறார் ஸ்போர்ட்ஸ் அகாதமி தலைவர் சுந்தரம் (அழகம்பெருமாள்). இதனை முறியடித்து தற்காப்பு கலையில் மாணவர்கள் ஐந்து பேரும் எப்படி சாதிக்கிறார்கள் என்பது தான் எழுமின் சொல்லும் செய்தி.
Read More

எழுமின் நடிகர்கள் & படக்குழுவினர்

எழுமின் அணியின் தகவல்

இயக்குனர் விபி விஜி
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

எழுமின் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
ஆபாசம், கவர்ச்சி, இரட்டை அர்த்த காமெடி வசனங்கள் என வழக்கமான கமர்சியல் சினிமாவாக இல்லாமல், குழந்தைகளுக்கான திரைப்படம் ஒன்றை எடுத்ததற்காகவே இயக்குனர் விஜிக்கு மிகப்பெரிய பாராட்டுகள். குழந்தைகளுக்கான கேளிக்கையாக மட்டும் இல்லாமல், நல்ல செய்தி ஒன்றை சொல்கிறது எழுமின். வழக்கமான ஸ்போர்ட்ஸ் பட பார்முலாவுக்குள் படத்தை நகர்த்தாமல், மாணவர்கள் கற்கும் தற்காப்பு கலை நிஜ வாழ்க்கையில் அவர்களுக்கு எப்படி உதவுகிறது என்பதை காட்சிப்படுத்தி இருப்பது சிறப்பு. நிறைய விஷயங்களை ரிஸ்க் எடுத்து செய்திருக்கிறார்கள். காமெடி ஹீரோவான விவேக்குக்கு இது புதிய பரிமாணம். மகன் மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருக்கும் அவர், அவனை இழக்கும் போது வெளிப்படுத்தும் உணர்வுகள் நம் கண்ணில் கண்ணீர் வரவழைக்கின்றன. நிஜ வாழ்க்கையில் அவர் எப்படி தவிக்கிறார் என்பதை திரையிலும் வெளிப்படுத்தியிருக்கிறார். பல இடங்களில் மங்களம் சாரை ஞாபகப்படுத்தினால், இந்த படத்துக்கு அது நிச்சயம் தேவை என மனம் ஏற்றுக்கொள்கிறது. காமெடி ஏரியாவை செல் முருகனுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு, பெர்பாமன்ஸ் காட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தியிருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு வெள்ளித் திரையில் மீண்டும் நடிகை தேவயானி. அதே கொஞ்சும் அழகுடன் மிளிர்கிறார். ஒரு பர்பெக்ட் அம்மாவாக சிறப்பாக செய்திருக்கிறார். வெல்கம் பேக் தேவயானி. வில்லன்களாக நடித்திருக்கும் அழகம்பெருமாள், ரிஷி, போலீசாக நடித்திருக்கும் பிரேம்குமார் என அனைவருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள். செல் முருகனின் ஒன் லைன்கள் சிரிப்பை வரவைக்கின்றன. இருப்பினும் இன்றைய காலத்துக்கு குழந்தைகளுக்கு மிகவும் அவசியமான படம் எழுமின். அடிக்கு அடி, உதைக்கு உதைன்னு சட்டத்தை கையில் எடுக்கிறது தப்புதான். ஆனால் இன்றைக்கு குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை பார்க்கும் போது, அதெல்லாம் தப்பே இல்லைன்னு நினைக்க தோணுது. குழந்தைகளுக்கு படிப்பு ஒன்று மட்டுமே போதாது, தற்காப்பு கலையும் அவசியம் எனச் சொல்லும் எழுமின் படத்தை பாராட்டி வரவேற்கலாம்.

எழுமின் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

எழுமின்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+