ஃபர்ஹானா இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு & எஸ் ஆர் பிரகாஷ் பாபு இணைந்து 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து ஜித்தன் ரமேஷ், செல்வராகவன், ஐஸ்வர்யா தத்தா என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அக்டோபர் 05, 2022ல் ஆயுத பூஜை தினத்தன்று படக்குழு சார்பில் வெளியானது.
ஃபர்ஹானா திரைப்படத்தின் கதை
கதைக்கரு
குடும்ப வறுமை எண்ணி வேலைக்கு செல்லும் ஐஸ்வர்யா ராஜேஷ், அங்கு எதிர்பாராமல் ஒருவரின் சூழ்ச்சியில் சிக்குகிறார். அதிலிருந்து அவர் எப்படி தப்பித்தார் என்பதே படத்தின் கதை
கதை
ஐஸ்வர்யா ராஜேஷ் - ஜித்தன் ரமேஷ் ஜோடிக்கு மூன்று பிள்ளைகள். வறுமையில் வாழும் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக வேலைக்கு செல்ல முடிவெடுக்கிறார். ஒரு கால் சென்டர் பணிக்கு செல்லும் ஐஸ்வர்யா ராஜேஷ், அந்த வேளையில் அதிக சம்பளத்திற்கு ஒரு வேலை இருக்கிறது என அந்த வேலையை செய்ய முடிவெடுக்கிறார்.
ஒருவர் கால் செய்தால் தனது அடையாளத்தை மறைத்து ஆபாசமாக பேசுவது தான், அந்த வேலை. அந்த வேலையில் ஒருவருடன் நெருங்கி பழக ஆரம்பிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் எதிர்பாராமல் அவரிடம் சிக்குகிறார். பின் பல வழிகளில் பல அசச்சுறுத்தல்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் சந்திக்கிறார், பின் என்ன நடந்தது என்பதே படத்தின் கதை.