X
பைட் கிளப்
Action | Drama | 15 Dec 2023 | A | 138 Mins
Tamil

பைட் கிளப் கதை

பைட் கிளப் - இயக்குனர் அப்பாஸ் ஏ ரக்மத் இயக்கத்தில் விஜய் குமார் நாயகனாக நடிக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஆதி இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் கோவிந்த வசந்த் இசையமைத்துள்ளார்.

அதிரடி - திரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் க்ரிபாகரன் எடிட்டிங் செய்துள்ளார்.

பைட் கிளப் தமிழ் சினிமாவில் 2023 டிசம்பர் 15ல் வெளியாகியுள்ளது, இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.
 


பைட் கிளப் திரைப்படத்தின் கதை

கதைக்கரு: பல ஆண்டுகளாக தான் வாழும் இடத்தில் நடந்து வரும் கேங் சண்டையில் எதிர்பாராமல் சிக்கும் நாயகன் அதனை எப்படி கையாண்டு வருகிறார், என்பதே இப்படத்தின் கதைக்கரு.

கதை

வடசென்னையில் பழவேற்காடு கடல் பக்கத்தில் நடக்கும் கலவரங்களை பற்றி இயக்குநர் அப்பாஸ் இப்படத்தில் பேசியுள்ளார். பாக்ஸரான பெஞ்சமினுக்கு (கார்த்திகேயன் சந்தானம்) ஏரியா புள்ளைங்க எல்லாம் போதை பொருளுக்கும் பொருளை எடுத்துக் கொண்டு கொலைகாரர்களாகவும் ஆகாமல் அவர்களை விளையாட்டில் பிரபலமாக்க முயற்சிக்கிறார்.

ஆனால், எதிர்தரப்பான கிருபாவுடன் (சங்கர் தாஸ்) பெஞ்சமினின் தம்பி ஜோசப் சேர்ந்துக் கொண்டு அண்ணன் பெஞ்சமினை போட்டுத் தள்ளுகிறார். ஆனால், ஜோசப்பை வைத்து கேம் ஆடிவிட்டு கிருபா அரசியல்வாதியாக மாறி அந்த ஏரியாவை தன் வசப்படுத்தி விட்டு எட்டப்பனாக மாறிய ஜோசப்பை கழட்டி விடுகிறார். 

கிருபாவை பழிவாங்க ஜோசப் எப்படி ஹீரோ செல்வாவை (விஜய் குமார்) இந்த சதி வலையில் சிக்க வைக்கிறார் என்பதும் இறுதியில் என்ன ஆகிறது என்பதும் தான் இந்த படத்தின் கதை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+