X
முகப்பு சினி தரவரிசை

சாய் பல்லவி முதல் அதிதி ஷங்கர்: மருத்துவ பட்டம் வென்ற தமிழ் திரை பிரபலங்கள்

Author Sakthi Harinath | Updated: Friday, July 19, 2024, 11:54 PM [IST]

தமிழ் திரையுலகில் பணியாற்றி வரும் நட்சத்திரங்களில் மருத்துவ பட்டம் வென்றுள்ள திரை பிரபலங்களின் பட்டியல் இங்கு உள்ளன. நடிப்பின் மீது ஆர்வம் கொண்டுள்ள பலர் தங்களின் துறைகளில் இருந்து சினிமா துறைக்கு வருகை தருகின்றனர். தமிழ் சினிமாவில் அஜ்மல், சாய் பல்லவி, அதிதி ஷங்கர், பரத் ரெட்டி என பலர் மருத்துவராக பட்டம் வென்று, தற்போது தமிழ் சினிமாவில் பணியாற்றி பிரபலமாகியுள்ளனர். முழு பட்டியல் இதோ.


cover image
அஜ்மல் அமீர்
1

அஜ்மல் அமீர் ஒரு தமிழ் மற்றும் மலையாள மொழித் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2004ஆம் ஆண்டு பிப்ரவரி 14 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து அஞ்சாதே, தநா-07-அல 4777, கோ போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ...

சாய் பல்லவி
2

சாய் பல்லவி இந்திய தென்னிந்திய நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடிக்கின்றார். தமிழ் நாட்டில் கோயம்புத்தூரில் பிறந்த இவர், 2008-ம் ஆண்டு விஜய் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பான உங்களில் யார் அடுத்த பிரபு தேவா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அதன் தொடர்ச்சியாக 2008-ம் ஆண்டு தமிழில் வெளிவந்த தாம் தூம் என்ற திரைப்படத்தில் ...

பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்
3

பவர் ஸ்டார் எனும் புனைப்பெயரில் அறியப்படும் சீனிவாசன் தமிழ்த்திரைப்பட நடிகர், தயாரிப்பளர், இயக்குனராவார். 2013 சனவரி 13 இல் நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் முன்னணி வேடத்தில் நடித்தார். இதற்கு முன்னர் லத்திக்கா எனும் தமிழ்த்திரைப்படத்தை தயாரித்து நடித்திருந்தார். ...

சேதுராமன் (சேது)
4

சேதுராமன் தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் மருத்துவர் ஆவார். இவர் சேது என்ற திரைப்பெயர் கொண்டு தமிழ் திரையுலகில் பிரபலமானவர். இவர் 2013ம் ஆண்டு 'கண்ணா லட்டு தின்னஆசையா' என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர்.திரைப்பயணம்சேதுராமன் (சேது) தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகரான சந்தானத்தின் நண்பரான இவர், நடிகர் ...

பாரத் ரெட்டி
5

பரத் ரெட்டி - தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் மருத்துவராக பட்டம் வென்று நடிப்பில் உள்ள ஆர்வத்தால் இவர் சினிமா துறையில் பணியாற்றி வருகிறார். இவர் பெரும்பாலும் நடிகர் சந்தானம் திரைப்படங்களில் ஒரு சில முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். ...

வித்யா பிரதீப்
6

வித்யா பிரதீப் இந்திய திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி ஆவார். இவர் 2014-ம் ஆண்டு எ.எல்.விஜய் இயக்கிய சைவம் திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர்.கேரளா மாநிலத்தில் ஆலப்புழா நகரத்தை பிறப்பிடமாய் கொண்ட இவர், தனது கல்வியினை முடித்துவிட்டு சென்னையில் கண் மருத்துவமனை ஒன்றில் ஆராய்ச்சியாளராக பணியாற்றிவந்துள்ளார். இவர் ஸ்டெம் செல் மற்றும் செல் தெரபின் ...

அதிதி ஷங்கர்
7

அதிதி ஷங்கர் - தமிழ் திரைப்பட நடிகை ஆவார். இவர் 2022 ஆம் ஆண்டு விருமன் படத்தில் நாயகியாக நடித்து திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தினை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.அதிதி ஷங்கர், தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஆவார்.அதிதி ஷங்கர் புகைப்படங்கள் ...

பிரணிதா
8

பிரணிதா சுபாஷ் இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகையும், வடிவழகியும் ஆவார். மேலும் இவர் அக்டோபர் 17, 1992 ஆம் ஆண்டு பிறந்தார். மற்றும் தென்னிந்த மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.2010 ஆம் ஆண்டில் தெலுங்குத் திரைப்படமான போக்கிரி திரைப்படத்தின் கன்னடப் பதிப்பில் முதன் முதலாக நடித்தார். ...

சௌந்தர்யா
9

சௌந்தர்யா சத்தியநாராயணன், சௌந்தர்யா என்னும் புனைப்பெயர் கொண்டு திரையுலகில் அறியப்படும் இவர், இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களின் முன்னணி நடிகை ஆவார்.இவர் 1992-ம் ஆண்டு "நன்னை தங்கை" என்ற கன்னட திரைப்படத்தின் வாயிலாக திரைத்துறைக்குள் அறிமுகமான இவர், 1992-ம் ஆண்டு "ராய்த்து பாரதம்" ...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+