ஃப்ரீடம் சத்யசிவா இயக்கும் வரவிருக்கும் தமிழ் திரைப்படம் ஆகும். இந்த படத்தில் சசிகுமார் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பை கிப்ரான் வழங்கியுள்ளார். மனதை தொட்டுக் கொண்டும் சிந்திக்கவைக்கும் கதை அம்சத்துடன் படம் உருவாகியுள்ளது. இப்படத்தை பாண்டியன் பி தயாரித்து, விஜய கணபதி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படுகின்றது.
கதை
1991ஆம் ஆண்டு, சில அகதிகள் ஒரு பெரிய கொலை வழக்கில் தவறாக கைது செய்யப்பட்டு வேலூர் கோட்டையில் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் குற்றமற்றவர்கள் என்று தெரிய வந்தாலும், பலர் சிறையிலேயே இருந்து வந்தனர். 1995ஆம் ஆண்டு, அந்தக் குழுவில் இருந்த 43 பேர் சிறையிலிருந்து தப்பியடைய திட்டமிட்டு தப்பினார்கள். அவர்களில் சிலர் மீண்டும் பிடிக்கப்பட்டனர், மற்றவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று சுதந்திரத்தை நாடினர்.
வெளியீட்டு தேதி
ஃப்ரீடம் திரைப்படம் ஜூலை 11, 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது.