காந்தி கண்ணாடி - ஷெரீஃப் எழுதி இயக்கிய இந்திய தமிழ் மொழி திரைப்படமாகும். கே.பி.ஒய் பாலா மற்றும் நமிதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னணி நடிகர்களாக அறிமுகமாகிறார்கள், பாலாஜி சக்திவேல் மற்றும் அர்ச்சனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இசையை பிரபல இசையமைப்பாளர்கள் ஜோடி விவேக்–மெர்வின் அமைத்துள்ளனர். ஒளிப்பதிவை பாலாஜி கே ராஜா கவனித்துள்ளார். எடிட்டிங்கை சிவானந்தீஸ்வரன் மேற்கொண்டுள்ளார். இந்த படத்தை ஆதிமூலம் கிரியேஷன்ஸ் பதாகையின் கீழ் ஜெய் கிரண் தயாரிக்கிறார்.
கதை
கதிர் என்ற இளம் இவென்ட் பிளானர் தனது வாழ்க்கையின் மிகப்பெரிய வாய்ப்பைப் பெறுகிறார். காந்தி என்ற முதியவர், தனது 60வது திருமண ஆண்டு விழாவை நடத்தச் சொல்கிறார். ஆரம்பத்தில் ஒரு பெரிய விழாவாகத் தொடங்கும் நிகழ்ச்சி, அங்கிருக்கும் ஒவ்வொருவரின் கனவுகள், சிரமங்கள் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. காதல், நம்பிக்கை மற்றும் சவால்களால் நிரம்பிய உணர்ச்சி பயணமாக கதை மாறுகிறது.
வெளியீட்டு தேதி
காந்தி கண்ணாடி செப்டம்பர் 5, 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது.