X
தமிழ் » திரைப்படங்கள் » காட்ஸில்லா vs காங்
காட்ஸில்லா vs காங்

காட்ஸில்லா vs காங்

Action | 24 Mar 2021 |
Tamil

2.5 /5 Users

0 /5 Filmibeat

காட்ஸில்லா vs காங் கதை

காட்ஸில்லா vs காங் இயக்குனர் ஆடம் வின்கார்ட் இயக்கத்தில் ஹாலிவுட் திரைப்பட பிரபல கதாபாத்திரங்களான காட்ஸில்லா மற்றும்  காங் என்ற இரண்டு ராட்ச மிருகங்கள் மோதும் அதிரடி மற்றும் சாகச திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் தாமஸ் டல், ஜான் ஜெஷினி என ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் டாம் ஹோல்கென்போர்க் இசையமைத்துள்ளார். காட்ஸில்லா Vs காங் திரைப்படத்தின் கதை கதைக்கரு : ஹோலோ எர்த் என்னும் பூமிக்கு அடியில் உள்ள ராட்சச மிருகங்கள் வாழும் இடத்திற்கு காங் என்னும் மிருகத்தை அழைத்து செல்வதே படத்தின் கதை. இதற்கிடையில் காட்ஸில்லா காங்-யை தாக்க பின் இந்த இரண்டு மிருகங்களுக்கும் இடையே நடக்கும் யுத்தம் தான் படத்தின் சுவாரஸ்ய திரைக்கதை. கதை : ஸ்கல் தீவில் ராட்ச 'காங்' குரங்கை நவீன தொழில்நுட்ப உதவியோடு பாதுகாத்து வரும் ஒரு குழு, ஒரு நிறுவனத்தின் தூண்டுதலில் ஹோலோ எர்த் (Hollow Earth) என்னும் ராட்ச  மிருகங்கள் வாழும் இடத்திற்கு காங்-யை அழைத்து செல்கின்றனர். கடல் வழியாக அண்டார்டிகா (அந்தாட்டிக்கா)-வுக்கு செல்லும் இந்த குழு, இடையில் காட்ஸில்லா மிருகத்தால் தாக்க படுகின்றனர். நடுக்கடலில் இந்த இரண்டு மிருகங்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிகழ்கிறது. ஆனால் கடலில் வாழும் காட்ஸில்லா, காங்-யை எளிதாக விழ்த்துகிறது. பின் குழு ஒரு வழியாக காங்-யை ஹோலோ எர்த் (Hollow Earth) இடத்திற்கு அழைத்து செல்கின்றனர்.  அங்கு காங் தனது முன்னோர்கள் வாழ்ந்த இருப்பிடத்தை கண்டுபிடித்து, மகிழ்ச்சியை உள்ளது. அச்சமயம் காங்குக்கு உதவுவதாக கூறி ஏமாற்றி சூழ்ச்சி செய்து, இந்த காட்ஸில்லா, காங் போன்ற ராட்சச மிருகங்களை அழிக்கும் நோக்கத்தில் உள்ள அந்த நிறுவனத்திற்கும் காங் பாதுகாவலர்களுக்கும் இடையே சண்டை நடக்கிறது.  பின் காட்ஸில்லா காங் -யை யுத்தத்திற்கு அழைக்க பின் இந்த இரண்டு மிருகங்களும் மோதி கொள்கிறது. இறுதியில் யார் வென்றனர் என்பதே படத்தின் கதை. ஆனால் எதிர்பாராத விதமாக இயந்திரத்தால் உருவாக்கப்பட்ட ஒரு ராட்சச மிருகம் வந்து காட்ஸில்லாவை தாக்குகின்றது. பின் காங் உதவியில் அந்த இயந்திர (Mecha Godzilla) காட்ஸில்லாவை இருவரும் இணைந்து அழிக்கின்றனர். காட்ஸில்லா Vs காங் திரைப்படத்தின் தகவல்கள் தொழில்நுட்பத்தை மிகவும் துல்லியமாக சரியான முறையில் கையாண்டுள்ளனர், படக்குழுவினர். காட்சிகளாக இப்படத்தின் உள்ள வீடியோ ரசிகர்களை பெரிய அளவில் ரசிக்க வைத்து கவர்கிறது, குறிப்பாக இந்த காட்ஸில்லா மற்றும் காங் இடையே நடக்கும் யுத்தம் ரசிகர்களை இருக்கை நுணிக்கு கொண்டு செல்கிறது. தமிழக திரையரங்குகள் மற்றும் இந்தியா திரையரங்குகளில் 2021 மார்ச் 24 ல் வெளியான இப்படம், அந்த வார முடிவில் மார்ச் 28ல் இந்தியாவில் 35 கோடி கள் வரை வசூலித்து இப்படம் புகழ் பெற்றுள்ளது. இந்த வசூலில் பெரும்பாலும் 75 சதவீதம் தமிழ் நாடு மற்றும் தென்னிந்தியா திரையரங்குகள் மூலம் வசூல் ஆகியுள்ளது. தமிழகத்தில் மார்ச் மூன்றாவது வாரம் வெளியான ஒரு முன்னணி நடிகர் மற்றும் இயக்குனர் கூட்டணியில் உருவான "காடன்" திரைப்படம் உள்பட பல தமிழ் திரைப்படத்தினை ஓரங்கட்டி தமிழக திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்துள்ளது இந்த ஹாலிவுட் திரைப்படம், காட்ஸில்லா Vs காங். காட்ஸில்லா Vs காங் திரைப்படம் உலகளவில் சரியான நேரத்தில் வெளியாகிருந்தால், உலகளவில் திரைப்பட வசூல் சாதனையில் முதல் இடத்தில் உள்ள, மார்வெல் நிறுவனத்தின்  அவெஞ்சர்ஸ் - எண்ட்கேம் திரைப்படத்திற்கு ஈடாக ஒரு சரித்திரம் படைத்திருக்கும் என திரைப்பட வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த இக்கட்டான சூழலில், பல நாடுகளில் பல திரையரங்குகள் மூடப்பட்ட நேரத்தில் இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று மிகவும் மதிக்கத்தக்க பிரமாண்ட படமாக புகழ் பெற்றுள்ளது. இப்படம் 2021 ஏப்ரல் 2ல் HBO தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்படுகிறது.
Read More

காட்ஸில்லா vs காங் நடிகர்கள் & படக்குழுவினர்

காட்ஸில்லா vs காங் அணியின் தகவல்

இயக்குனர் ஆடம் வின்கார்ட்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஜுங்கி எக்ஸ் எல்
தயாரிப்பாளர் தாமஸ் டுல், ஜான் ஜெஷினி
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

காட்ஸில்லா vs காங் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
ஹோலோ எர்த் என்னும் பூமிக்கு அடியில் உள்ள ராட்சச மிருகங்கள் வாழும் இடத்திற்கு காங் என்னும் மிருகத்தை அழைத்து செல்வதே படத்தின் கதை. இதற்கிடையில் காட்ஸில்லா காங்-யை தாக்க பின் இந்த இரண்டு மிருகங்களுக்கும் இடையே நடக்கும் யுத்தம் தான் படத்தின் சுவாரஸ்ய திரைக்கதை.

காட்ஸில்லா vs காங் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

காட்ஸில்லா vs காங்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+