குட் லக் சகி இயக்குனர் நாகேஷ் குகுனூர் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தில் ஆதி, ஜெகபதி பாபு என தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். இப்படத்தினை தயாரிப்பாளர் சுதீர் சந்திரா தயாரிக்க, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் ஒரு விளையாட்டு போட்டியை சார்ந்து நடக்கும் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சிறந்தன் தாஸ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார்.
கதை கரு
ஒரு அப்பாவி கிராமத்து பெண் இந்திய அளவில் நடைபெறும் பிரபல துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு பிரபலமாகிறார். அவர் அந்த சிறு கிராமத்தில் இருந்து எப்படி இந்திய அளவில் நடைபெறும் துப்பாக்கி சுடும் போட்டிக்கு போட்டியாளராக பங்கேற்கிறார் என்பதே இப்படத்தின் சுவாரஸ்ய திரைக்கதை. இப்படத்தின் திரைக்கதையை தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்பட ரசிகர்கள் ரசிக்கும் வண்ணத்தில் இப்படத்தினை இயக்குள்ளனர் படக்குழுவினர்.