ஜிப்ஸி இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா, நடாஷா சிங் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆவணத் திரைப்படம். இப்படத்தினை பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஒலிம்பியா மூவீஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ் அம்பேத் குமார் இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
காதல் மற்றும் அரசியல் கருத்துகள் உடைய ஒரு ஆவணப்படமாக உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் செல்வகுமார் எஸ்.கே ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பாளர் ரேமண்ட் டெரிக் கிராஸ்டா இப்படத்தினை எடிட்டிங் செய்துள்ளார்.
ஜிப்ஸி படத்தின் பிரத்யேக தகவல்கள்
ஜிப்ஸி படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. இப்படத்தின் இயக்குனரான ராஜு முருகன் ஜோக்கர், குக்கூ போன்ற படங்களை இயக்கி தமிழ் திரையில் பிரபலமானவர்.
இப்படத்தின் இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் வெளியான ஜோக்கர் படம் 2016-ம் ஆண்டு தேசிய விருது பெற்று புகழ் பெற்றது. தனது முதல் படத்திலையே இப்படத்தின் இயக்குனர் தேசிய விருது பெற்று தமிழ் திரையுலகில் அனைவரின் கவனைத்தை பெற்று புகழ் பெற்றார்.
ஜிப்ஸி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2018 ஜூன் மாதம் 11ல் வெளியானது. இப்படத்தில் நாயகன் ஜீவா ஒரு இசைக்கலைஞர் மற்றும் சமூக ஆர்வாளராக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் முடிவு பெற்று பல போராட்டங்களுக்கு பின்னர் இப்படம் முற்றிலுமாக முடித்து 2020ம் ஆண்டு மார்ச் 6ல் திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தின் டீஸர் 2019 ஜனவரி மாதம் வெளியானது, பின்னர் ட்ரைலர் 2019 ஏப்ரல் மாதம் வெளியானது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'வெரி வெரி பாட்' பாடல் வெளியாகி பல சர்ச்சைகள் கிளப்பி பிரச்சனைகளில் சிக்கியது.
ஜிப்ஸி படத்தின் கதை
காஷ்மீரில் பிறக்கும் ஜீவா, சிறுவயதில் அங்கு நடக்கும் ஒரு போரின் காரணமாக தனது பெற்றோரை இழக்கிறார். பின்னர் ஒரு குதிரைக்காரர் இவரை வளர்த்து வருகிறார். ஒரு நாள் அவரும் இறக்க, தனது குதிரையுடன் தனது வாழ்வினை வாழ தொடங்குகிறார்.
குதிரையை வைத்து ஒவ்வொரு இடத்திற்கும் சென்று கூத்து நடத்தி வாழும் ஜீவா, ஒரு இஸ்லாமிய பெண்ணின் மேல் காதல் கொள்கிறார். அந்த பெண்ணின் திருமண தினத்தன்று ஊரை விட்டு ஓடும் ஜீவா, வேறு ஒரு இடத்தில் இருவரும் வாழ்கின்றனர்.
அந்த பெண் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் எதிர்பாராமல் ஒரு பிரச்சனையில் சிக்குகிறார், ஜீவா. பின்னர் என்ன நடந்தது? கர்ப்பமாக உள்ள அந்த பெண்ணின் நிலை என்ன? பிரச்சனைக்கு பின்னணி காரணம் என்ன? என்பதே படத்தின் கதை.