ஹிட் லிஸ்ட் - இயக்குனர் சூர்யா கதிர் கக்கள்ளர் மற்றும் இயக்குனர் கார்த்திகேயன் கே இணைந்து இயக்கியிருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தில் தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இயக்குனரான விக்ரமன் அவர்களின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாகியுள்ளார். மேலும் இப்படத்தில் சரத் குமார், கவுதம் மேனன், ஸ்ம்ருதி வெங்கட், ஐஸ்வர்யா தத்தா, பாலா சரவணன், சித்தாரா என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் முக்கிய காப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இயக்குனர் கே எஸ் ரவிகுமார் ஹிட் லிஸ்ட் படத்தினை தயாரிப்பாளராக தனது ஆர் கே செல்லுலோய்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் சத்யா சி இசையமைத்துள்ளார்.
கிரைம் - திரில்லர் படமாக உருவாகியுள்ள ஹிட் லிஸ்ட் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ராமச்சரன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஜான் ஆப்ரஹாம் எடிட்டிங் செய்துள்ளார். 2024 மே 31ல் உலகமெங்கும் வெளியாகியுள்ள ஹிட் லிஸ்ட் திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.
ஹிட் லிஸ்ட் திரைப்படத்தின் கதை
நாயகன் விஜய் கனிஷ்கா ஐ.டி துறையில் வேலை பார்த்து வருகிறார். ஒரு எளிமையான நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவரது வீட்டில் அம்மா (சித்தாரா) மற்றும் தங்கை (அபி நக்ஷத்திர) உடன் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்து வருகிறார். இவரும் ஐஸ்வர்யா தத்தாவும் காதலித்து வருகின்றனர். நாயகன் விஜய் கனிஷ்கா வள்ளலார் கொள்கையை அடிப்படையாக கொண்டு எந்த உயிருக்கும் தீங்கு நினைக்காமல் வாழ்ந்து வருகிறார்.
தீடிரென ஒரு முகமூடி மனிதன் நாயகனின் அம்மா, தங்கை இருவரையம் கடத்தி செல்கிறார். பின் நாயகனை தொடர்பு கொண்டு ஒரு விளையாட்டை தொடங்குகிறார். முதலில் அவரது வீட்டில் இருக்கும் சேவலை கொலை செய்ய வேண்டும் என சொல்லி முகமூடி மனிதன் நாயகனின் அம்மா & தங்கையை பணய கைதியாக வைத்து மிரட்டுகிறார். எந்த உயிருக்கும் தீங்கு நினைக்காமல் சைவம் உணவு உண்ணும் நாயகன், வேறு வழியின்று சேவலை கொலை செய்து விடுகிறார்.
பின் இரண்டாவது சுற்று என்று சொல்லி, ஒரு பெரிய படைபலம் கொண்ட ரவுடியை கொலை செய்ய வேண்டும் என சொல்கிறார், முகமூடி மனிதன். ரவுடி கதாபாத்திரத்தில் ராமசந்திரன் ராஜு நடித்துள்ளார். அவரை நெருங்கிய நாயகன் விஜய் கனிஷ்கா, ரவுடியை கொலை செய்து விடுகிறார்.
போலீஸ் அதிகாரியாக சரத் குமார் அறிமுகமாகிறார். இந்த கொலைகளை செய்யும் நாயகனை பின் தொடர்கிறார், சரத் குமார். முகமூடி மனிதன் மூன்றாவது சுற்றாக கவுதம் மேனன் (மருத்துவர்)-யை கொலை செய்ய சொல்ல, இறுதியில் என்ன ஆனது?
சரத் குமார் மற்றும் விஜய் கனிஷ்கா இருவரும் இணைந்து அந்த முகமூடி மனிதனை கண்டு பிடித்தனரா? எதற்காக நாயகனை குறிவைத்து இந்த கொலைகளை செய்ய சொல்கிறார், முகமூடி மனிதன்... என்பதே இப்படத்தின் சுவாரஸ்ய திரைக்கதை.