இது என்ன மாயம், தமிழ் காதல் திரைப்படம். ஏ. எல். விஜய் இயக்கும் இத்திரைப்படத்தில் விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ், காவ்யா செட்டி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். நிரவ் சாவின் ஒளிப்பதிவில் தயாராகும் இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
இயக்குநர் ஏ. எல். விஜய் மற்றும் விக்ரம் பிரபு ஆகியோர் முதல்முறையாக இணையும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2014 சூலை மாதம் முதல் சென்னையில் தொடங்கியது.