இன்று நேற்று நாளை 2 இயக்குனர் எஸ்.பி. கார்த்திக் இயக்கத்தில் விஷ்ணு விஷால், கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் அறிவியல் புனைவு திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சி.வி.குமார் தனது திருக்குமரன் எண்டெர்டைன்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார்.
இப்படத்திற்கு கதையாசிரியராக இன்று நேற்று நாளை முதல் பாகத்தின் இயக்குனரான இயக்குனர் ரவிக்குமார் கதை எழுதியுள்ளார். பின்னர் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவுப்பு 2019 ஜூலை 2ல் இணையத்தளத்தில் வெளியானது.