இன்று நேற்று நாளை தமிழ் நகைச்சவை கலந்த அறிவியல் புனைவு திரைப்படம். இத்திரைப்படத்தை புதுமுக இயக்குனர் ரவி குமார் ஆர் இயக்க, விஷ்ணு, மியா ஜார்ஜ், கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளனர்.
கதை
2065 ஆம் ஆண்டு ஒரு டைம் மெஷினைக் கண்டுபிடிக்கிறார் ஆர்யா. தவறுதலாக அது கடந்த காலம், அதாவது 2015-ம் ஆண்டுக்கு வந்து, விஷ்ணு, கருணாகரன் கைகளில் சிக்குகிறது. அப்புறமென்ன புகுந்து விளையாடுகிறார்கள் அந்த மெஷினை வைத்துக் கொண்டு. காதல், பிஸினஸ் என அனைத்தையும் தங்களுக்கு வசதியாக மாற்றிக் கொள்ள அந்த டைம் மெஷின் உதவுகிறது. ஆனால் ஒரு கட்டத்தில் ஆட்டம் முடிவுக்கு வந்து, டைம் மிஷினே ஆபத்தாக மாறுகிறது. அடுத்து என்ன நடக்கிறது என்பதை சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்கள்.