twitter

    இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு கதை

    இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், ஆனந்தி, ராமதாஸ் நடித்துள்ள காதல் மற்றும் சமூக பிரச்சனையை பற்றி எடுத்துரைக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் பா ரஞ்சித் தனது நீலம் ப்ரோடுக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தினை தயாரிக்க, அறிமுக இசையமைப்பாளர் டென்மா இசையமைத்துள்ளார்.

    சமூக பிரச்சனைகளுக்கு எதிராக ஒரு புரட்சி மற்றும் காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார் மற்றும் படத்தொகுப்பாளர் செல்வா ஆர் கே இணைந்து பணியாற்றியுள்ளனர்.

    இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் தகவல்கள்

    இப்படத்தின் தயாரிப்பாளர் பா ரஞ்சித் திரையுலகில் சமூக மாற்றத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைக்கதைக்கு அதிக ஈடுபாடு அளித்து திரைப்படங்களை உருவாக்கி வருபவர். இவரின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் மூலம் இந்த சமூகத்தில் உள்ள சில பிரச்சனைகளை மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார் இவர்.

    இப்படத்தின் கதை கேட்டு நான் தயாரிப்பதாக முன்வந்துள்ளார் இப்படத்தின் நாயகன் தினேஷ், பின்னர் இப்படம் இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனத்திற்கு கைமாறியது. இப்படத்தின் நாயகனும், படத்தின் தயாரிப்பாளருமான பா ரஞ்சித் இப்படத்திற்கு முன்பு அட்டகத்தி, கபாலி போன்ற திரைப்படங்களில் பணியாற்றியுள்ளனர்.

    இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் நாயகியான ஆனந்தி இப்படத்தின் தயாரிப்பாளர் பா ரஞ்சித் தயாரிப்பில் இப்படத்திற்கு முன்பு உருவான பரியேறும் பெருமாள் படத்தினை தொடர்ந்து இப்படத்திலும் நாயகியாக நடித்துள்ளார்.

    இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்படத்தின் கதை

    "உயிர் வாழ உழைப்பு உண்டு அந்த உயிருக்கு உத்தரவாதமில்லாத உழைப்பு தான் எங்களுக்கு உண்டு" என்ற வரிகளில் உணர்ச்சி பூர்வமாக உருவாகியுள்ளது இப்படத்தின் கதை.

    இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்தி வாய்ந்த பல குண்டுகள் கடலுக்கு அடியில் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்று சென்னையில் உள்ள மகாபலிபுரம் பீச்சில் கரை ஒதுங்குகிறது. இதனை பார்த்த மக்கள் அச்சம் அடைய, பின் அதனை சென்னை காவலர்கள் கைப்பற்றி அதனை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்கிறார்கள். காவல் நிலையத்தில் கொண்டு செல்லப்பட்டு குண்டு அங்கிருந்து சில விஷமிகளால் திருடப்படுகிறது. 

    இப்படத்தின் நாயகன் தினேஷ் ஒரு பழைய இரும்பு கடையில் லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர் பணியாற்றும் அந்த இரும்பு நடக்கும் சில ஆபத்துகளை உணர்ச்சி பூர்வமாக கூறியுள்ளார் இயக்குனர். தினேஷ் மற்றும் அங்குள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றும் ஆனந்தி, இருவரும் காதலித்து வருகின்றனர். இவர்கள் காதலுக்கு இடையூறாக ஜாதி இருக்கிறது. ஜாதியை கைக்காட்டி ஆனந்தியின் உறவினர்கள் அதனை எதிர்க்கின்றனர். 

    காவல் நிலையத்தில் இருந்து திருடப்பட்ட அந்த குண்டு நாயகன் தினேஷ் வேலை செய்யும் கடைக்கு வருகிறது. அந்த குண்டின் ஆபத்தை மக்களுக்கு தெரியப்படுத்த சில சமூக நல மாணவர்கள் அதனை தேடுகிறார்கள். மற்றொருபுறம் அதனை காவலர்களும் தேடி வருகிறார்கள். 

    அதனை பற்றி அறியாமல் நாயகன் தினேஷ் அதனை சென்னையில் இருந்து பாண்டிச்சேரியில் உள்ள குடோனுக்கு லாரியில் எடுத்துச் செல்கிறார். பின் அதனை பற்றி அறியும் தினேஷ் என்ன செய்தார்? போலீஸிடம் ஒப்படைத்தார்? சமூக நல மாணவர்களிடம் கிடைத்ததா? இல்லை குண்டு வெடித்ததா? என்பதே படத்தின் கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு with us? Please send it to us ([email protected]).