இருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனர் சந்தோஷ் பி ஜெயகுமார் இயக்கத்தில், கெளதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, கருணாகரன், பாலா சரவணன், ராஜேந்திரன், ஜான் விஜய், ஷாரா ஆகியோர் நடித்த நகைச்சுவை த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை கே ஈ ஞானவேல்ராஜா தயாரிக்க, பாலமுரளி பாலு இசையமைக்கிறார்.
கதை :
கௌதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, யாஷிகா ஆனந்த், ஷா ரா ஆகிய நால்வரும் தாய்லாந்தின் பட்டாயா நகரில் இருக்கும் சொகுசு பங்களாவிற்குச் செல்கிறார்கள். அங்கிருக்கும் வித்தியாசமான நோக்கம் கொண்ட பேய் ஒன்று அவர்களிடம் தன்னுடைய தேவையை நிறைவேற்றிக் கொள்ள நினைக்கிறது. அந்தப் பேயிடம் இருந்து அவர்கள் தப்பித்தார்களா, அதற்காக அவர்கள் செய்தது என்ன என்பது தான் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் கதை.