X
ஜமா
Documentary | Drama | Family | 02 Aug 2024 | U | 133 Mins
Tamil

ஜமா கதை

ஜமா - இயக்குனர் பாரி இளவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம். இப்படத்தில் பாரி இளவழகன், சேத்தன், அம்மு அபிராமி என பல பிரபலங்கள் நடிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

அரசியல் மற்றும் சமூக கருத்துகள் உள்ளடங்கிய படமாக உருவாகியுள்ள 'ஜமா' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கோபால் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பார்த்தா எம் ஏ எடிட்டிங் செய்துள்ளார்.

நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தினை தயாரிப்பாளர் சாய் தேவ் ஆனந்த், சசிகலா இனைந்து தயாரிக்க, பிக்சர்ஸ் பாக்ஸ் கம்பெனி நிறுவனம் விநியோகம் செய்துள்ளது.

2024 ஆகஸ்ட் 2ல் திரையரங்கில் வெளியாகியுள்ள 'ஜமா' திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு ''யு'' சான்றிதழ் அளித்துள்ளது.



ஜமா திரைப்படத்தின் கதை

திருவண்ணாமலை பகுதியில் 'ஜமா' - தெருக்கூத்து டிராமா ட்ரூப் நடத்தி வரும் சேத்தன் குழுவில் திரெளபதியாக நடித்து வரும் ஹீரோ கல்யாணத்துக்கு திருமணம் ஆகவில்லை. பெண்ணாக நடித்து நடித்து பெண்களுடன் பழகி வரும் அவருக்கு பெண் போன்ற நளினம் மிக்க சுபாவமே அதிகம் வந்து விட்டது தான் அதற்கு காரணம் என்பதை தெளிவாக காட்டுகின்றனர். ஆனால், அந்த நாயகனின் திறமையை அறிந்து அம்மு அபிராமி அவரை காதலிக்கிறார். காதலை தாண்டி தனியாக ஜமா நடத்த வேண்டும் என்கிற ஆசை நாயகனுக்கு உள்ளது. அர்ஜுனர் வேஷம் போட்டு நடிக்க வேண்டும் என்கிற முயற்சியில் அவருக்கு எதிரியாக சேத்தன் மாற இறுதியில் என்ன ஆனது என்பது தான் இந்த படத்தின் கதை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+