ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் (ஜிகர்தண்டா 2) - இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரென்ஸ், எஸ் ஜே சூர்யா, நிமிஷா சஜயன் என பலர் தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தன் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தினை தயாரிக்கிறார், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
தமிழ் சினிமா ரசிகர்கள் ரசிக்கும் வகையில் அதிரடி - திரில்லர் கதையம்சத்தை நகைச்சுவை கதைக்களத்தில் உருவாக்கியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஷாஃபிக் முகமது அலி எடிட்டிங் செய்துள்ளார்.
ஜிகர்தண்டா டபுள் X (ஜிகர்தண்டா 2) திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படம் 2023 தீபாவளி பண்டிகை முன்னிட்டு உலகமெங்கும் திரைக்கு வருகிறது. இப்படத்தினை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் விநியோகம் செய்துள்ளது.
ஜிகர்தண்டா 2 படத்தின் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் ஓடிடி உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்புவதற்கான உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தின் கதை
கதைக்கரு: ஒரு கேங்ஸ்டர் வாழ்வை திரைப்படமாக இயக்க வேண்டும் என ஆர்வம் கொண்ட எஸ் ஜே சூர்யா, கேங்ஸ்டராக இருக்கும் ராகவா லாரென்ஸ் பற்றிய தகவலை சேகரிக்கிறார். பின் ஒரு சமயத்தில் ராகவா லாரென்ஸ்-யிடம் சிக்க, தன்னை நாயகனாக வைத்து திரைப்படம் இயக்க வேண்டும் என எஸ் ஜே சூர்யா-வுக்கு நிபந்தனையிடும் லாரென்ஸ்-யை சமாளித்து அதிலிருந்து எஸ் ஜே சூர்யா எப்படி தப்பிக்கிறார், என்பதே இப்படத்தின் கதைக்கரு.
கதை:
ராகவா லாரென்ஸ் (சீசர்) ஒரு கேங்ஸ்டர். தமிழகத்தில் ஷைன் டாம் சாக்கோ மிகப்பெரிய நடிகர் மற்றும் அரசியல்வாதியாக உள்ளார். இவருக்கும் நான்கு ரௌடிகள் கைவசம் உள்ளனர். எதிர் கட்சி தலைவரான இளவரசு ஷைன் டாம் சாக்கோ-வை தோற்கடிக்க அவருக்கு பக்கபலமாக இருக்கும் நான்கு ரௌடிகளை கொலை செய்ய ரகசிய முடிவை எடுக்கிறார். அதில் ஒருவர் தான் மதுரையை சேர்ந்த சீசர் (ராகவா லாரென்ஸ்).
எஸ்.ஐ தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள எஸ் ஜே சூர்யா, இரு சிக்கலில் சிக்கி கொலை பழி ஏற்கிறார். இதிலிருந்து தப்ப இவருக்கு காவலர்களால் ஒரு ரகசிய திட்டம் வருகிறது. மதுரையில் இருக்கும் ரௌடியான சீசரை கொலை செய்தால், இவருக்கும் போலீஸ் வேலையும், விடுதலையும் கிடைக்கும் என்கின்றனர், காவலர்கள்.
ராகவா லாரென்ஸ்-ற்கு சினிமா நடிகராக வேண்டும் என கனவு. அதனை பயன்படுத்தி ஒரு இயக்குனராக லாரென்ஸ் அறிமுகம் பெற்று, அவருடன் பயணிக்கிறார், எஸ் ஜே சூர்யா. இறுதியில் என்ன ஆனது? என்பதே படத்தின் கதை.