ஜீவி இயக்குனர் வி.ஜே.கோபிநாத் இயக்கத்தில் வெற்றி, கருணாகரன் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் வேலபாண்டியன் தயாரிக்க, இசையமைப்பாளர் கே.எஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். பாபுதமிழ் திரைக்கதை மற்றும் வசனத்தில், ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார் ஒளிப்பதிவில், படத்தொகுப்பாளர் பிரவீன் எடிட்டிங் செய்துள்ளார்.
கதை
வெற்றி மற்றும் கருணாகரன் இருவருமே ஒரே வீட்டில் தங்கி ஒரே கடையில் வேலை செய்துகொண்டு வருகிறார்கள். மிகவும் ஏழ்மையான வாழ்க்கையினை வாழும் இவர்களுக்கு, தங்களது வாழ்க்கையின் மேல் விரக்தி உருவாகிறது. பணம் சம்பாதித்து வாழ்க்கையினை அனுபவிக்க வேண்டும் என்று ஆசை கொள்கிறார்கள்.
சரியான படிப்பறிவு இல்லாமல் ஒரு கடையில் வேலை செய்யும் இவர்களுக்கு, எப்படி பணம் சம்பாதிப்பது என்று அறியாமல் இருக்கின்றனர். இவ்விருவரும் இவர்கள் தங்கியிருந்த வீட்டின் ஓனரிடம் நகை திருட முயற்சிக்கிறார்கள். அப்படி இவர்கள் செய்யும் இந்த திருட்டு இவர்கள் வாழ்க்கையை எந்த விதத்தில் பாதிப்பை ஏற்படுத்திகிறது, என்பதே கதை.
இக்கதையினை விவரித்து, சமுதாயத்தில் வாழும் மனிதனின் வாழ்க்கைக்கு முக்கியமானது எது, சந்தோசமா? பணமா?. ஒரு ஏழையையும், பணக்காரணையும் இந்த உலகம் எவ்வாறு பார்க்கிறது? ஒரு மனிதனின் தேவையே அவனை இயக்குகிறது என்ற கருத்துகளை உள்ளடக்கிய திரில்லர் திரைக்கதையில் இப்படம் உருவாகியிருக்கிறது.