ஜோஷ்வா இமை போல் காக்க இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வருண் நாயகனாக நடித்திருக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தில் ராகே (அறிமுக நடிகை) நாயகியாக நடிக்க, யோகி பாபு, மன்சூர் அலிகான், விசித்ரா என பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தினை தமிழ் சினிமா முன்னணி தயாரிப்பாளர் 'ஐசரி கே கணேஷ்' தனது வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் கார்த்திக் இசையமைத்துள்ளார்.
ஜோஷ்வா படத்திற்கு ஒளிப்பதிவாளர் எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பாளர் அந்தோணி எடிட்டிங் செய்துள்ளார். இப்படம் 2024 மார்ச் 01ல் திரையரங்கில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.
ஜோஷ்வா இமை போல் காக்க கதை
குந்தவை என்ற ஒரு பணக்கார பெண்ணுக்கு ஏற்பட்ட கொலை மிரட்டலால் அவரை பாதுகாக்கும் நோக்கத்தோடு ஜோஷ்வா (வருண்) பணியாற்றுகிறார். பல கலைகளை காற்றுள்ள ஜோஷ்வா அந்த பெண்ணை பாதுகாக்க எந்த அளவிற்கு முயற்சி செய்கிறார், இதில் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது பின் என்ன ஆனது என்பதே ஜோஷ்வா படத்தின் கதை.