k-13 இயக்குனர் பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் காதல் மற்றும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் எஸ்.பி. ஷங்கர் & சாந்த பிரியா தயாரிக்க இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தர்புகா சிவா இசையமைக்க இருந்த நிலையில் பிப்ரவரி 21-ல் இசையமைப்பாளர் சாம் சி எஸ்-ஐ மாற்றியுள்ளனர் படக்குழுவினர்.
இதனை குறித்து இப்படத்தின் இயக்குனர் பரத் நீலகண்டன் போதுமான கால்ஷீட் இல்லாததால் இப்படத்திற்கு இசையமைப்பாளரை மாற்றவேண்டியதாயிற்று என தெரிவித்துள்ளார்.
கதை
திரையுலகில் நீடநாட்களாக துணை இயக்குனராக பணியாற்றிவரும் இளைஞன் மதியழகன் (அருள்நிதி) இயக்குனராக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். இவருக்கு கிட்டிய வாய்ப்பு பறிபோக, பின்னர் இவர் கூறிய கதை பிடிக்காமல் இரண்டு நாட்களில் வேறஒரு கதை அமைத்து கொண்டுவர சொல்கிறார் ஒருவர்.
அந்த நேரத்தில் நண்பர்களின் வற்புறுத்தலால் க்ளப்பிற்கு செல்கிறார், அங்கே எழுத்தாளர் மலர்விழியை (ஷ்ரத்தா ஸ்ரீநாத்) சந்திக்கிறார். அந்த பழக்கம் வீடு வரைக்கும் செல்கிறது. மறுநாள் காலை கண் விழித்து பார்க்கையில் இருவரும் கே-13 என்ற அபார்ட்மெண்ட் வீட்டில் ஒரு நாற்காலியில் கட்டிப்போட்டு இருக்கிறார் அருள்நிதி, பின் இவருக்கு அருகில் நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் கை அறுபட்ட நிலையில், இரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கிறார். ஒரு இக்கட்டான சூழலில் அபார்ட்மெண்டில் சிக்கிக்கொள்ளும் அருள்நிதி, என்ன செய்வதென்று தெரியாமல் அந்த வீட்டில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறார். அங்கிருந்து தப்பித்தாரா, ஷ்ரத்தா யார், எதற்காக அருள்நிதியை தேடி வந்து இப்படி சிக்க வைக்கிறார்? இறுதியில் இவர்களது கனவுகளும் திட்டங்களும் நிறைவேறியதா என்பதே கே-13 படத்தின் கதை.