X
கே-13

கே-13

Action | Thriller | 03 May 2019 | U/A | 104 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

கே-13 கதை

k-13 இயக்குனர் பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் காதல் மற்றும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் எஸ்.பி. ஷங்கர் & சாந்த பிரியா தயாரிக்க இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தர்புகா சிவா இசையமைக்க இருந்த நிலையில் பிப்ரவரி 21-ல் இசையமைப்பாளர் சாம் சி எஸ்-ஐ  மாற்றியுள்ளனர் படக்குழுவினர்.  இதனை குறித்து இப்படத்தின் இயக்குனர் பரத் நீலகண்டன் போதுமான கால்ஷீட் இல்லாததால் இப்படத்திற்கு இசையமைப்பாளரை மாற்றவேண்டியதாயிற்று என தெரிவித்துள்ளார். கதை திரையுலகில் நீடநாட்களாக துணை இயக்குனராக பணியாற்றிவரும் இளைஞன் மதியழகன் (அருள்நிதி) இயக்குனராக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். இவருக்கு கிட்டிய வாய்ப்பு பறிபோக, பின்னர் இவர் கூறிய கதை பிடிக்காமல் இரண்டு நாட்களில் வேறஒரு கதை அமைத்து கொண்டுவர சொல்கிறார் ஒருவர். அந்த நேரத்தில் நண்பர்களின் வற்புறுத்தலால் க்ளப்பிற்கு செல்கிறார், அங்கே எழுத்தாளர் மலர்விழியை (ஷ்ரத்தா ஸ்ரீநாத்) சந்திக்கிறார். அந்த பழக்கம் வீடு வரைக்கும் செல்கிறது. மறுநாள் காலை கண் விழித்து பார்க்கையில்  இருவரும் கே-13 என்ற அபார்ட்மெண்ட் வீட்டில் ஒரு நாற்காலியில் கட்டிப்போட்டு இருக்கிறார் அருள்நிதி, பின் இவருக்கு அருகில் நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் கை அறுபட்ட நிலையில், இரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கிறார். ஒரு இக்கட்டான சூழலில் அபார்ட்மெண்டில் சிக்கிக்கொள்ளும் அருள்நிதி, என்ன செய்வதென்று தெரியாமல் அந்த வீட்டில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறார். அங்கிருந்து தப்பித்தாரா, ஷ்ரத்தா யார், எதற்காக அருள்நிதியை தேடி வந்து இப்படி சிக்க வைக்கிறார்? இறுதியில் இவர்களது கனவுகளும் திட்டங்களும் நிறைவேறியதா என்பதே கே-13  படத்தின் கதை.
Read More

கே-13 நடிகர்கள் & படக்குழுவினர்

கே-13 அணியின் தகவல்

இயக்குனர் பரத் நீலகண்டன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை சாம் சி எஸ்
தயாரிப்பாளர் எஸ்.பி. ஷங்கர்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

கே-13 விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
ஒரு குறும்படத்துக்கான கதைக் கருவை வைத்துக்கொண்டு, அதனை முழு நீளப்படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் பரத் நீலகண்டன். மிகக் குறைவான கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு, நல்ல க்ரைம் திரில்லர் படத்தை கொடுத்ததற்காக இயக்குனருக்கு பாராட்டுகள். படம் முழுவதையும் தனது தோளில் வைத்து சுமக்க வேண்டிய பொறுப்பு அருள்நிதிக்கு. ஏனெனில் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை 90 சதவீத காட்சிகளில் அவர் வருகிறார். அந்த பொறுப்பை உணர்ந்து, அருமையாக நடித்திருக்கிறார். பயம், மிரட்சி, அதிர்ச்சி, கோபம், தவிப்பு என படம் முழுதும் அருள்நிதியின் முகத்தில் உணர்வுகள் மாறிமாறி வந்து செல்கின்றன. பேசாமலேயே பேச வைத்திருக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். ஐந்து நிமிடம் பிணமாக நடிப்பதே கஷ்டமான விஷயம். கண் இமை அசையாமல் பாதி படத்துக்கு மேல் பிணமாகவே நடித்து, அசர வைத்திருக்கிறார் இந்த யாஞ்சி. யோகி பாபுவுக்கு ஒரே ஒரு சீன் தான். அதுவும் சிரிப்பு வரவைக்கிற மாதிரி இல்ல. படத்தோட பப்ளிசிட்டிக்கு வேண்டுமென்றால், யோகி பாபுவின் படம் உதவும். இப்படியே போச்சுன்னா, இந்த வருஷம் ரிலீசாகும் எல்லா படத்துலயும் யோகி பாபு முகம் இருக்கும். ஆனால் அடுத்த வருஷம் ரிலீசாகும் ஒரு படத்துலக்கூட அவர் இருக்க மாட்டார்.

கே-13 திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

கே-13

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+