காடுவெட்டி - இயக்குனர் சோலை ஆறுமுகம் இயக்கத்தில் ஆர் கே சுரேஷ், சுப்பிரமணிய சிவா, ஆடுகளம் முருகதாஸ், JSK கோபி என பல தமிழ் பிரபலங்கள் நடித்திருக்கும் அதிரடி - குடும்ப திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரா போஸ், சோலை ஆறுமுகம் (இப்பட இயக்குனர்) இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் சாதிக் (வணக்கம் தமிழா) மற்றும் ஸ்ரீகாந்த் தேவா இணைந்து இசையமைத்துள்ளனர்.
அதிரடி திரைப்படமாக உருவாகியுள்ள 'காடுவெட்டி' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் புகழேந்தி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஜான் ஆப்ரஹாம் எடிட்டிங் செய்துள்ளார்.
காடுவெட்டி திரைப்படம் 2024 மார்ச் 15ல் உலகமெங்கும் வெளியாகியுள்ள நிலையில் இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யூ/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.
காடுவெட்டி திரைப்படத்தின் கதை
கதைக்கரு: குறிப்பிட்ட சமூகத்தினரை குறிவைத்து ஒற்றுமையை குழைத்து அவர்களின் வீட்டுப் பெண்களை நாடக காதல் வலையில் சிக்க வைத்து சூறையாடும் சில சமூகத்தினரின் வெறிச்செயலை எதிரித்து நிற்கும் நாயகனின் கதை.