காரி இயக்குனர் ஹேமந்த் இயக்கத்தில் சசிகுமார், பார்வதி அருண், பாலாஜி சக்திவேல் என பல நட்சத்திரங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ளார்.
காரி திரைப்படம் 2022 நவம்பர் 25ல் திரையரங்கில் வெளியானது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யூ/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.
காரி திரைப்படத்தின் கதை
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வாழும் மக்கள் இரு பகுதியாக பிரிந்து வாழ்கின்றனர். அந்த கிராமத்து மக்களுக்கு பொதுவாக கருப்பன் கோவில் உள்ளது. அந்த கோவில் நிர்வாகம் யார் என இரு கிராமத்து மக்களுக்கும் போட்டி நிகழ்கிறது. இரண்டு கிராமத்து மக்களும் ஜல்லிக்கட்டு போட்டி ஒன்று நடத்தி அதில் வெற்றி பெறுவோருக்கு அந்த கோவில் நிர்வாகம் என முடிவெடுக்கின்றனர்.
சசிகுமார் கிராமத்தில் இருந்து வெளியேறி குடுமபத்தோடு சென்னையில் வாழ்ந்து வருகிறார். சசிகுமாரின் குடும்பத்தை அழைக்க கிராமத்து நிர்வாகிகள் சென்னை வந்து சசிகுமாரை ஜல்லிக்கட்டு போட்டிக்கு அழைக்கின்றனர். சென்னையில் குதிரை ஜாக்கி ஆக இருக்கும் சசிகுமார் கிராமத்திற்கு செல்ல முதலில் மறுக்கிறார். பின் கிராமத்திற்கு செல்லும் சசிகுமார் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்கிறார். அடுத்து என்ன ஆனது என்பதே படத்தின் கதை.