கழக தலைவன் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின் தனது 'ரெட் கெய்ன்ட் மூவிஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் அரோள் கரோலி இசையமைத்துள்ளார்.
இப்படம் அதிரடி - திரில்லர் திரைக்கதையில் உருவாகி 2022, நவம்பர் 18ல் உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்திற்கு தமிழக தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.
கழக தலைவன் திரைப்படத்தின் ஆன்லைன் ஓடிடி உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனமும், தொலைக்காட்சி உரிமையை கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
கழக தலைவன் திரைப்படத்தின் கதை
குறைவான எரிபொருளை கொண்டு இயங்கும் வாகனங்களை தயாரித்து வெளியிடும் வஜ்ரா நிறுவனம் சுற்றுப்புறச் சூழலுக்கு கெடுதல் விளைவிக்கும் வகையில் அந்த வாகனங்களை தயாரித்து வரும் விஷயத்தை உதயநிதி கசியவிடுகிறார்.
கார்ப்பரேட் ஆலை மூலமாக பாதிக்கப்பட்ட மக்கள் போராடிய நிலையில், உதயநிதி ஸ்டாலினின் பெற்றோர்கள் கொல்லப்படுகின்றனர். அவரை எடுத்து வளர்க்கும் பெண் தான் உதயநிதி ஸ்டாலினை இப்படியொரு மிஷனில் இறங்கச் செய்கிறார். அதற்காக டெக்னாலஜி துணை கொண்டு 8 ஆண்டுகள் தன்னை மறைத்து வாழ்ந்து வந்துள்ளார், உதயநிதி ஸ்டாலின்.
வஜ்ரா நிறுவனத்தின் சீக்ரெட் அம்பலமான நிலையில், அதனை செய்தது யார் என்பதை கண்டுபிடிக்க கார்ப்பரேட் நிறுவனத்தால் நியமிக்கப்படும் கொடூர வில்லன் தான் பிக் பாஸ் ஆரவ். கீழ் மட்டத்தில் இருந்து ஒருத்தர் ஒருத்தராக தேடிப் பிடித்து கொன்று, இறுதியில் உதயநிதி ஸ்டாலினை நெருங்குகிறார், ஆரவ். பின் என்ன ஆனது என்பதே படத்தின் கதை.