twitter

    களவாணி 2 கதை

    களவாணி 2 இயக்குனர் சற்குணம் தானே தயாரித்து, இயக்கியுள்ள நகைச்சுவை மற்றும் காதல் திரைப்படம், இத்திரைப்படத்தில் விமல், ஓவியா, சரண்யா பொன்வண்ணன், இளவரசு, கஞ்சா கருப்பு, விக்னேஷ்காந்த, மண்ணை சாதிக் மற்றும் பலர் நடிக்க, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது 2010-ம் ஆண்டு வெளிவந்த களவாணி திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கிறது. பின்னர் அரசியல் கதைக்களத்தை கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

    ரிலீஸ்
    இயக்குனர் சர்குணம் தயாரித்து இயக்கிய இத்திரைப்படத்தில் முதல் பாகத்தை தொடர்ந்து விமல், ஓவியா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இத்திரைப்படமானது 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து திரைக்கு வெளிவர முடியாமல் சில காரணங்களால் வெளியிட்டு தேதிகள் தள்ளிச்சென்றன.

    கதை
    முதல் பாகத்துக்கும் இரண்டாம் பாகத்துக்கும் இருக்கும் ஒற்றுமை நடிகர்கள் மற்றும் ஒரத்தநாடு, அரசனூர் போன்ற கதைக்களம் மட்டுமே. மற்றப்படி, முந்தைய படத்துக்கும், இதற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. 

    வேலை வெட்டிக்கு போகாவிட்டாலும், வெரப்பாக அயர்ன் செய்த வெள்ளை வேட்டி, சட்டையோடு சும்மாவே ஊர் சுற்றி வருகிறார் விமல். அவருடன் சேர்ந்து களவாணித்தனம் செய்து கொண்டு திரிகிறார் விக்னேஷ்காந்த். இருவருக்கும் கிடைத்த ஊறுகாய் கஞ்சா கருப்பு. அப்பா இளவரசுவின் புலம்பல்களை காதில் போட்டுக்கொள்ளாமல் ஊரைச் சுற்றித் திரியும் விமலை, ஆனி போய், ஆடிபோய், ஆவணி வந்தா அன்னப்போஸ்ட் தான் என செல்லம் கொடுத்து கெடுக்கும் அதே தாய் சரண்யா. 

    முதல் பாகத்தில் அண்ணனிடம் தலையில் கொட்டு வாங்கிய தங்கைக்கு, இந்த பாகத்தில் கல்யாணம் ஆகி புருஷன் வீட்டில் இருக்கும் பெண்ணாக புரொமோசன். ஆனால் ஓவியாவும், விமலும் இதில் மீண்டும் புதிதாக காதலிக்கிறார்கள். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த திருமணம் ரத்தாகிடிச்சு போல. சரி அது அவங்க குடும்ப விசயம், நாம கதைக்கு வருவோம். 

    யாரைய ஆட்டையப்போட்டு பணம் பார்க்கலாம் என காத்துக்கொண்டிருக்கும் விமலுக்கு ஜாக்பாட் அடித்தது போல் வருகிறது உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு. தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்து, எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களிடம் இருந்து பணம் பறித்து வாபஸ் வாங்கலாம் என்பது விமல் பிளான். உடன் விக்னேஷை சேர்த்துக் கொண்டு, கஞ்சா கருப்புக்கு ஆசைக்காட்டி பணத்தை லவட்டி தேர்தலில் மனு தாக்கல் செய்கிறார். ஆனால் இவர்கள் மனு செய்தது இவர்களை தவிர ஊருக்குள் வேறு யாருக்குமே தெரியவில்லை.

    எதிர்த்து போட்டியிடும் சொந்த மாமாவும், ஓவியாவின் அப்பாவும் விமலை ஏளனமாக பேச, எப்படியாவது தேர்தலில் ஜெயித்தே தீரவேண்டும் என சபதம் போடுகிறார் விமல். இதன் பிறகு அவர் செய்யும் களவாணித்தனங்கள், நிறைய அதிரடி அட்ராசிட்டிகள் தான் களவாணி 2ன் மீதிக்கதை.

    பிரச்சனை
    தயாரிப்பாளர் சிங்கார வேலன் இத்திரைப்படம் வெளிவரக்கூடாது என நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெற்றுள்ளார். இப்படத்தின் நாயகனான விமல் களவாணி 2 படத்தின் காப்புரி மையை தருவதாக கூறி 1 கொடியே 50 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். அதற்கான ரசீது தயாரிப்பாளர் சிங்கார வேலனிடம் உள்ளதாகவும். தற்போது களவாணி 2 படத்திற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்று படக்குழுவினர் கூறுகின்றனர். இதன் தொடர்பாக உள்ள ஆதாரங்களை நான் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டேன் என்று கூறினார் தயாரிப்பாளர் சிங்கார வேளாண்.

    இதனை தொடர்ந்து இப்படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளருமான சர்குணம் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடையை நீக்கினார். இந்நிலையில் இப்படத்தின் நாயகனான விமல் தயாரிப்பாளர் சிங்கார வேலணை சந்தித்து சமரசம் பேசியுள்ளார். இது குறித்து தயாரிப்பாளர் சிங்காரவேலன் நான் குடுத்த பணத்திற்கு ஈடாக 2019-ம் ஆண்டுக்குள் நடிகர் விமல் 2 படங்களில் நடித்து குடுத்து விடுவதாக உத்தரவாத கடிதம் ஒன்று கொடுத்துள்ளார். இதனால் நான் வழக்கை வாபஸ் பெறுகிறேன் என்றார்.

    இந்த பிரச்சனையை சுமுகமாக பேச்சுவார்தை மூலம் தீர்த்த படக்குழு, 2019 ஜூலை 5ல் இப்படத்தினை வெளியிட தீவிரமாக ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டிருந்தது. தற்போது மீண்டும் ஒரு பிரச்சனை வெடித்துள்ளது.

    மீண்டும் வெளியிடுவதற்கு பிரச்சனை
    இப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான சர்குணத்தின் மேல் நீதிமன்றத்தில் இப்படத்தின் இணை தயாரிப்பாளரான ஜெயக்குமார் இப்படத்திற்கு இடைக்கால தடை கேட்டு நீதி மன்றத்தில் 2019 ஜூலை 3 அன்று வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இப்படத்தின் தயாரிப்பாளர் சர்குணம் படம் வெளியாகுவதற்கு முன்பே இப்படத்தின் இணை தயாரிப்பாளரிடம் பெற்ற ₹67 லட்ச ரூபாயை திருப்பி தருவதாக கூறி உருவாக்கப்பட்ட ஒப்பந்தமாகும் அது. ஆனால் தற்போது தாயரிப்பாளர் சர்குணம் அவர்கள் எனக்கு கொடுக்க வேண்டிய பணம் நிலுவையில் இருக்க, இவர் படத்தினை வெளியிடுவதற்கு முயற்சிகள் எடுத்து வருகிறார். என இப்படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெயக்குமார் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார்.

    இந்த முனுவை விசாரித்த நீதிபதி, தயாரிப்பாளரும், இயக்குனருமான சர்குணம் வருகிற 2019 ஜூலை 10 தேதிக்குள் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும், அதுவரை இப்படத்தினை வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளது.

    இதனை தொடர்ந்து இவ்விருவர்களுக்கும் இடையே நடத்தப்பட்டு பேச்சு வார்த்தை சுமூகமாக முடிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் உள்ள வழக்கினை வாபஸ் பெற்று இப்படம் ஜூலை 5ல் வெளியானது.
    **Note:Hey! Would you like to share the story of the movie களவாணி 2 with us? Please send it to us ([email protected]).