X
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
Drama | Romance | Thriller | 28 Feb 2020 | U |
Tamil

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கதை

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரித்து வர்மா, ரக்ஷன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் காதல் மற்றும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப் என்பவருடன் வியாகம் 18 ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனமும் இப்படத்தினை இனைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன், ராமேஸ்வர் இசையமைப்பாளருடன் மசாலா கஃபே என்ற இசைக்குழு இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளது.

காதல் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லர் கதையாக உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பாளர் பிரவீன் ஆண்டனி எடிட்டிங் பணி செய்து இப்படத்திற்கு பணியாற்றியுள்ளனர்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் பிரத்யேக தகவல்கள்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் நாயகன் துல்கர் சல்மானின் திரைப்பயணத்தில் இப்படம் இவரது 25வது திரைப்படமாகும். தனது 25-வது படத்தினை அறிமுக இயக்குனர் தேசிங் பெரியசாமி உடன் இனைந்து தமிழில் நேர்முக தமிழ் படமாக நடித்துள்ளார் நாயகன் துல்கர் சல்மான்.

இப்படத்தின் முதற்கட்ட அறிவிப்புகள் மற்றும் படப்பிடிப்பு 2017ம் ஆண்டு உறுதி செய்யப்பட்டு 2017-பிப் மாதம் தொடங்கியுள்ளது. இப்படத்தின் நாயகி ரித்து வர்மா ஒரு பிரபல தெலுங்கு திரைப்பட நடிகை ஆவார். பின்னர் இப்படத்தில் இரண்டாம் நாயகனாக ரக்ஷன் நடித்துள்ளார். இவர் பிரபல தமிழ் தனியார் தொலைக்காட்சியான 'விஜய் தொலைக்காட்சியில்' ஒரு தொகுப்பாளராக பணியாற்றி தமிழ் திரையில் பிரபலமானவர்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இப்படம் 'யூ' சான்றிதழை பெற்று 2020 பிப் 28ல் திரைக்கு வரவுள்ளது.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் கதை

ஆன்லைன் அதிர்ச்சி மோசடியும் அதிரவைக்கும் சுவாரஸ்ய காதலும்தான், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்! ஹைடெக் தொழில்நுட்பத்தை கொண்டு, மோசடியில் ஈடுபடுபவர்கள், நண்பர்களான துல்கர் சல்மானும், ரக்‌ஷனும். துல்கருக்கு ரிதுவர்மா மீது காதல். ரக்‌ஷனுக்கு ரிதுவின் தோழி, நிரஞ்சனி அகத்தியன் மீது காதல். நால்வரும் நண்பர்களாகிறார்கள். கொஞ்சம் ஓவராக சம்பாதித்து காதலிகளுடன் கோவாவில் செட்டிலாக நினைக்கிறார்கள் இருவரும். அதன்படியே பல லட்சங்களுடன் செல்கிறார்கள்.

இதற்கிடையே, துல்கர், ரக்‌ஷனால் பாதிக்கப்படும் போலீஸ் அதிகாரி கவுதம் வாசுதேன் மேனன் அவர்களை தேடுகிறார். ஒரு கட்டத்தில் கோவாவில், கவுதம் மேனனிடம் சிக்குகிறார்கள் துல்கரும் ரக்‌ஷனும். பிறகுதான் தெரிய வருகிறது, அவர் தேடிவந்தது தங்களையல்ல, ரிதுவையும் நிரஞ்சனியையும் என்று. அவர்கள் யார், அவர்களை ஏன் கவுதம் மேனன் தேட வேண்டும் என்பதற்கு சுவாரஸ்யமாக விடை சொல்கிறது படம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+