கரகாட்டக்காரன் இயக்குனர் கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, செந்தில், கௌண்டமணி நடித்திருக்கும் நகைச்சுவை கலந்த குடும்பத்திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கருமாரி கந்தசாமி தயாரிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.
முற்றிலும் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக உருவாகியுள்ள கரகாட்டக்காரன் திரைப்படம், தமிழில் அதிக நாட்கள் திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ள பிரபல திரைப்படமாகும். இப்படம் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.
கரகாட்டக்காரன் திரைப்படத்தின் கதை கரு
ஒரு ஊருக்கு கரகம் ஆட செல்லும் நாயகன் குழு அந்த ஊரில் கரகாட்டத்தில் பிரபலமாக உள்ள கனகாவை சந்தித்து காதலில் விழுகிறார். பின்னர் இந்த காதல் இணைந்ததா என்பதே இப்படத்தின் கதை.
கரகாட்டக்காரன் திரைப்படத்தின் சிறப்புக்கள்
1. முற்றிலும் கரகாட்டக் கலைஞர்களை பற்றி எடுக்கப்பட்ட இந்த படம் காமெடி மற்றும் காதல் கலந்து மிகச் சிறப்பாக எடுக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தை இயக்குனர் கங்கை அமரன் இயக்கியிருந்தார்
2. கரகாட்டக்காரன் படத்தில் செந்தில் மற்றும் கவுண்டமணி இணைந்து செய்யும் காமெடி கலாட்டாக்கள் பார்ப்போரின் கண்களை இன்றும் சிரிக்க வைத்து கண்களை நனைய செய்யும், குறிப்பாக இவர்கள் இருவரும் சண்டையிடும் வாழைப்பழக் காமெடி மிகவும் பிரபலமானது.
3. கிராமத்து வாசனையுடன் எடுக்கப்பட்ட இந்த படம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது.
4. பொதுவாக கரகாட்டக்கார நிபுணர் என்றால் கண்டிப்பாக அவருக்கு நடனம் தெரிந்திருக்க வேண்டும் ஆனால் ராமராஜனுக்கு அவ்வளவு அற்புதமாக நடனம் ஆடத் தெரியாது இருப்பினும் இந்த படத்தில் அவரது அற்புதமான நடிப்பின் மூலம் இது எல்லாம் மிகப்பெரிய ஒரு விஷயமாக எடுத்து கொள்ளாமல் மக்கள் அனைவரும் ரசித்து வந்தனர்.
5. கரகாட்டக்காரன் திரைப்படம் "நடிகர் திலகம்" சிவாஜி கணேசன் நடித்த "தில்லானா மோகனாம்பாள்" படத்தின் சாயலில் இருப்பதாக பலர் பேசி வந்த நிலையில் மக்கள் அதையெல்லாம் பொருட்படுத்தாது இந்த படத்தை பார்த்து ரசித்து கொண்டாடி வந்தனர். நீண்ட நாட்கள் திரையில் ஓடிய திரைப்படம் என்ற பெருமை பெற்றது இந்த படம்.
6. இந்த படத்தில் நடிகர்களின் நடிப்பும் கதையும் இந்த படத்தின் வெற்றிக்கு எவ்வளவு முக்கியமோ அதைவிட மிக முக்கியமான ஒன்று இந்த படத்தின் பாடல்கள், இசைஞானி இளையராஜாவின் இசையில் இந்த படத்தில் மொத்தம் 9 பாடல்கள் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
7. வெளியான அனைத்து பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து அனைத்து பாடல்களும் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. மேலும் இளையராஜா இதில் இசைத்த பாடல்கள் படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய பலமாகவும் இருந்தது.