காசிமேடு இயக்குனர் லோகேஷ் குமார் இயக்கத்தில் கலையரசன், வாணி போஜன் நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கவுதம் ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பாளர் அரோள் கரோலி இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு 2019 ஏப்ரல் 24ல் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் தொடரின் நாயகியாக நடித்த வாணி போஜன் தமிழ் வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளார்.