Tamil » Movies » Kaththi » Story

கத்தி (U/A)

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

22 Oct 2014
கதை
கத்தி, இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸின் கதை மற்றும் இயக்கத்தில் உருவாகி 2014 ஆம் ஆண்டு தீபாவளியன்று வெளியான தமிழ்த் திரைப்படம். இப்படத்தின் கதாநாயகராக விஜய்யும், கநாயகியாக சமந்தாவும் நடித்துள்ளனர். இப்படத்திற்கான படப்பிடிப்பு, 2014ம் ஆண்டு பிப்ரவரி 3ம் நாள் கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது. இப்படத்தில் விஜய், இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். விஜய் ஏற்கனவே அழகிய தமிழ்மகன் என்ற திரைப்படத்தில் முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடித்தார்.

கதை
    
ஒரு கொல்கத்தா சிறையில் , கதிரேசன் என்கின்ற  " கதிர் " (விஜய்), ஒரு குற்றவியல் கைதி விவேக் பானர்ஜி ( டோட்டா ராய் சவுத்ரி ) சிறையிலிருந்து   தப்பி சென்ற கைதியை கைப்பற்ற உதவுகிறார்.  ஆனால் அவர் போலீசாரிடமிருந்து  தப்பித்து செல்கிறார். பின்னர்,  அவர் சென்னை சென்று  அவரது நண்பர் மற்றும் சக - குற்றவாளி  தானு ( சதீஷ் ) உடன் பாங்காக்கில் தப்பிக்க முடிவு செய்கிறார். எனினும், அவர் பாங்காக் செல்லும்      விமான நிலையத்தில்  அங்கீதா ( சமந்தா ரூத் பிரபு )-வை சந்தித்த   பிறகு அவள் மீது ஒரு ஈர்ப்பு  உள்ளது என்பதை உணர்ந்துஅவரை திருமணம் செய்ய விரும்புகிறார். எனவே, அவருடைய   பாங்காக் செல்லும் திட்டம் தடைபடுகிறது.

கதிர் மற்றும் தானு, கதிர் போல உருவம் கொண்ட ஒரு மனிதனை கவனிக்கின்றனர். அவருடைய பெயர்  " ஜீவா " ( விஜய் ) ஜீவானந்தம்  குண்டர் குழுவால் சுடப்பட்டு  காயமடைந்த அவரை  மருத்துவமனையில்  சேர்கிறார். பின்னர்,  போலீஸிலிருந்து தப்பிக்க கதீர் ,  ஜீவா- வாக ஆள்மாறாட்டம் செய்யகிறார். அவர் பற்றி தெரிந்து வரை, ஜீவா என்ற பெயரில், கதிர் மற்றும் தானு , தாங்கள் பாங்காக் செல்லும் வரை  முதியோர் இல்லத்தில் 25,00,000 சேகரிக்கும் நோக்கத்துடன்  நுழைகின்றனர். 

பின்னர், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தன்னூத்து  என்ற  வறண்ட கிராமத்தில், ஜீவா ஒரு கம்யூனிச சிந்தனையாளர் மற்றும்  ஒரு ஹைட்ரோலஜி  பட்டதாரி என்றும்  அக்கிராமத்தில்  நிலத்தடி  நீர் இல்லை என்று  சிராங் ( நீல் நிதின் முகேஷ் )-ன் சொந்தமான ஒரு MNC தொழிற்சாலையின் கட்டுமானம் தங்களது நிலங்களை  ஏமாற்றி கைப்பற்றியதால், அண்டை தூத்துக்குடி மாவட்டம் உள்ளிட்ட ஐந்து மாவட்டம் முழுமையாக அழியும் என்று நீதிமன்றத்தில் கொடுத்துள்ள வழக்கிற்கு இன்னும் இரு நாட்களில் தீர்ப்பு என்பதை அறிந்த கதிர்,  ஜீவா மற்றும் கிராமத்தின் தலைவிதியை எண்ணி  கதிர், ஜீவா என்ற பெயரிலிருந்து  போராட முடிவு எடுக்கிறார்.

இதற்கிடையில் , உண்மையான ஜீவா சுயநினைவுக்கு வருகிறார்.  ஜீவா,  கதிராக  பூட்டி  கொல்கத்தா சிறையில்  அடைக்கப்படுகிறார்.
 அவருடைய கதை கேட்டு, அவரைப் பிடித்து வைத்திருக்கும் சிறையில், அவரை பழிவாங்க நினைக்கும் விவேக் உதவியுடன் அவரும்,  விவேகின் அடியாட்களும் சேர்ந்து தப்பித்தனர். 

ஜீவா மற்றும் விவேக் அடியாட்கள் சென்னை வருகின்றனர். கதிர் தேசிய உணர்வுடன், கிராமத்தின் நிலை கண்டு ஊடகங்களில் ஒளிபரப்ப முயற்சிகள் செய்கிறார், ஆனால் அவர்கள் அது ஒரு பரபரப்பான செய்தி அல்ல என்று ஊடகங்கள் நிராகரிக்கின்றன. ஒரு சில நாட்கள் கழித்து , சென்னை உயர் நீதிமன்றத்தில்  நீதிபதி,  ஜீவா மற்றும் அவரது கிராமத்திற்கு   எதிராகவும், சிராங் கிற்கு  ஆதரவாகவும்  தீர்ப்பு அறிவிக்கின்றார். அதனால்,  அவர்கள் தங்கள் ஆதாரத்தை அடுத்த 5 நாட்களுக்குள் சிராங் கின்  ஆதாரம் போலி என்று நிரூபிக்க முடியாமல் போனால்,  தீர்ப்பு  பின்னர் சிராங் கிற்கு ஆதரவாக செல்லும் மற்றும் கிராம மக்கள் தங்கள் நிலத்தை இழக்க நேரிடும்,  என்றும்  நீதிபதி அறிவித்தார். எனவே கதிர் வெளிநாட்டில் இருந்த  கிராமவாசிகளை தொடர்புகொண்ட போது அவர்கள் வெளிநாட்டில்  ஒப்பந்தக்காரர்கள் தங்கள் பாஸ்போர்டை தர மறுக்கிறார்கள் என்று கூறினர். மேலும் அவர்களால் 5 நாட்களுக்குள் சென்னை வர முடியாது என்றும் கருதி, கதிர் கடுமையான   நடவடிக்கைகள் எடுத்து பிரச்சினை பரபரப்பாக்க முடிவு எடுக்கிறார்.  

அவர், அங்கீதா, தானு மற்றும் முதியோர் இல்லத்தில் இருந்தவர்கள் அனைவரும்  சென்னையில் 5 ஏரிகளில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்களில் உட்கார்ந்து சென்னைக்கு   நீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகின்றனர். கதிர் ஒரு சில நாட்களுக்கு பிறகு குழாய் வெளியே வரும் போது  நாடு தழுவிய ஒளிபரப்பு மற்றும் ஊடகங்கள் இருந்தன. அவற்றின் முன் ஒரு உணர்வுபூர்வமான  சார்ஜ் உரையில் கிராமவாசிகளின் நிலையை  உயர்த்தி பேசுகிறார்.  பல மக்கள் அவர்களுக்கு சாதகமாக  நகர்கின்றனர்.  ஜீவா தப்பி ஓடியதை அறிந்து கதிர் அவரைத் தேடிக்  கண்டுபிடிக்க புறப்படுகிறார். 

இதற்கிடையில் , ஜீவா மற்றும் விவேக் அடியாட்கள் சென்னை வந்தடைகிறார்கள். ஆனால் ஜீவா சிராங் அடியாட்கள் மூலம் கடத்தப்படுகிறார். சிராங்கின் காவலில் இருக்கையில், கதிரை தொலைக்காட்சி  உரையில் காண்கிறார் ஜீவா. தீர்ப்புக்கு முன் இரவு, கதிர்,  
ஜீவாவை  சிராங்கிடமிருந்து காப்பாற்றி கிராம மக்களிடம் ஒப்படைக்கிறார். 

இறுதியில், அடுத்த நாள் , தீர்ப்பு ஜீவா மற்றும் கிராம மக்களுக்கு ஆதரவாக அமைகிறது. ஜீவா கொல்கத்தா போலிஸிடம்  சரணடைகிறார்.

Buy Movie Tickets
ஸ்பாட்லைட் படங்கள்