twitter

    கட்டப்பாவ காணோம் கதை

    கட்டப்பாவ காணோம் இயக்குனர் மணி செய்யோன் இயக்கத்தில், சிபி சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், காளி வெங்கட், யோகி பாபு, சாந்தினி, மைம் கோபி, லிவிங்ஸ்டன் மற்றும் திருமுருகன் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ் சினிமாவில், முதல் முறையாக இத்திரைப்படத்தில், மீனை முக்கிய கதாப்பாத்திரமாக சித்தரித்து படம் உருவாகியுள்ளனர். 

    கதை : 

    பாண்டியன் (சிபிராஜ்) பிறந்ததிருந்தே பல நஷ்டங்கள், தோல்விகள். அவர் எங்கு சென்றாலும், எதை செய்தலும், என்ன தொழில் ஆரம்பித்தாலும் அனைத்துமே தோலிவி தான். இதனாலே அவரது தந்தை (சித்ரா லக்ஷ்மணன்) பாண்டியனை பேட்லக் பாண்டியா என்றே அழைக்கிறார். 

    எதிலும் தோல்வியை சந்தித்த பாண்டியனுக்கு மீனக்ஷி (ஐஸ்வர்யா ராஜேஷ்)-யை பார்த்தவுடன் காதலில் விழுந்து பின் திருமணமும் செய்துகொள்கிறார். மீனாட்சி ஒரு மார்டன் சிந்தனையுடைய பெண்.

    மறுபுறத்தில், வஞ்சிரம் (மைம் கோபி) என்ற லோக்கல் டான் கட்டப்பா என்ற ஒரு ராசியுள்ள வாஸ்து மீனை வளர்க்கிறார். தனக்கு நடக்கும் அனைத்து நலத்துக்கும் காரணம் அந்த மீன் தான் என்று நம்புகிறார். அதனாலே, அவர் தன் மனைவியை விட அதிகமாக அந்த மீனை தான் தேசிக்கிறார். 

    வஞ்சிரம் வீட்டிற்கு திருட வரும் நண்டு (யோகி பாபு) அந்த மீனையும் திருடிச் செல்கிறார். அம்மீன் பல கைகளை கடந்து இறுதியில், பாண்டியன், மீனாக்ஷிக்கு பரிசுப்பொருளாக அவர்களின் வீட்டிற்கு வந்துவிடுகிறது. பிறகு அவர்களது வாழ்க்கை வேறு திசைக்கு செல்கிறது.

    அந்த மீனின் ராசியால் இன்னும் இவர்களின் வாழ்வில் ஏதாவது நல்லது நடக்குமா என்று எதிர்பார்க்கையில், மறுபுறம் வஞ்சிரம் ஆட்கள் மீனை தேடி பாண்டியன் வீட்டிற்க்கே வந்துவிடுகிறார்கள். 

    அதன் பிறகு பாண்டியன் குடும்பம் வஞ்சிரம் ரவுடிகளிடம் இருந்து தப்பினார்களா? இறுதியில் அந்த மீன் யார் கைக்கு கிடைத்தது ? என்ன ஆனது ? என்பதே படத்தின் மீதிக்கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie கட்டப்பாவ காணோம் with us? Please send it to us ([email protected]).