X
கழுகு 2
Action | Drama | Romance | 01 Aug 2019 | U | 126 Mins
Tamil

கழுகு 2 கதை

கழுகு 2 இயக்குனர் சத்யா சிவா இயக்கத்தில் இரண்டாம் பாகமாக உருவாகிறது கழுகு 2 . இப்படத்தின் முதல் பாகத்தில் நடித்த கிருஷ்ணா மற்றும் பிந்து மாதவி இந்த இரண்டாம் பக்கத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சிங்கார வடிவேலன் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

கதை

கழுகு திரைப்படத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் முற்றிலும் வேறுபட்ட திரைக்கதையை கையாண்டுள்ளார் இயக்குனர் சத்யா சிவா. 

கொடைக்கானலில் உள்ள எஸ்டேட் பகுதிகளில் செந்நாய்கள் தொந்தரவு அதிகமாக இருக்கிறது. எஸ்டேட் காடுகளில் வேளைக்கு செல்லும் பணியாளர்களை செந்நாய்கள் கூட்டமாக வந்து கடித்துக் கொல்வதால் பணியாளர்கள் எல்லாம் வேலைக்கு வர அஞ்சுகின்றனர். இதனால் எஸ்டேட் பணிகள் நிலுவையில் இருப்பதை கண்ட எஸ்டேட் முதலாளி செந்நாய்கள் தாக்குதலை கட்டுப்படுத்த வேட்டை ஆட்களை பணியமர்த்த முடிவு செய்கிறார்.

இதற்காக வேட்டை ஆட்களை தேடி எம் எஸ் பாஸ்கர் தேனிக்கு செல்கிறார். இவர் செல்லும் வழியிலி கிருஷ்ணா மற்றும் காளி இருவரும் காவலர்களின் துப்பாக்கியை திருடி ஓடிவருகின்றனர். இதனை காணும் எம் எஸ் பாஸ்கர் இவர்களை ஒரு வேட்டை காரர்களாய் நினைத்து கொள்கிறார். இவர்கள் இருவரும் திருடர்கள் என அறியாமல் நல்ல சம்பளம்,  சாப்பாடு, தங்குமிடம் ஏற்பாடுகளுடன் ஒரு வேலை தருவதாக கூறுகிறார்.

இந்த விவரங்களை அறியும் கிருஷ்ணா மற்றும் காளி காவலர்களிடம் இருந்து தப்ப வேட்டைக்காரர்களாக கொடைக்கானல் எஸ்டேடிற்கு செல்கின்றனர். இவர்கள் இருவரையும் வேட்டைகாரர்கள் என நம்பி, அப்பகுதி மக்களும் வேலைக்கு வருகிறார்கள். 

எம்எஸ் பாஸ்கரின் மகள் பிந்து மாதவியும் அங்கு வேலைக்கு வருகிறார். ஒரு நாள் செந்நாய்களிடம் தனியாக மாட்டிக் கொள்கிறார் பிந்து மாதவி, ஒருவழியாக செந்நாயை கொன்று பிந்து மாதவியை காப்பாற்றுகிறார், கிருஷ்ணா. 

பின்னர் இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள். இதற்கு எம் எஸ் பாஸ்கர் எதிர்ப்பு தெரிவிக்க, காளியுடன் சேர்ந்து ஏதாவது பெரிய திருட்டு செய்துவிட்டு நாயகியுடன் சந்தோஷமாக வாழலாம் என்று திட்டம் தீட்டுகிறார் கிருஷ்ணா. இவரின் உண்மை முகம் அங்குள்ள மக்களுக்கு தெரிந்ததா?, நாயகியுடன் இணைத்தாரா நாயகன் என்பதே படத்தின் மீதிக்கதை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+