கிடா - இயக்குனர் ரா வெங்கட் இயக்கத்தில் பூ ராம், காளி வெங்கட் என பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ரவி கிஷோர் தயாரிக்க, இசையமைப்பாளர் தீசன் இசையமைத்துள்ளார்.
கிடா திரைப்படத்தின் கதை
தீபாவளி பண்டிகையை பேரனுடன் கொண்டாட நிணைக்கும் தாத்தா, பேரனுக்கு புது துணி மற்றும் தீபாவளி பொருட்களை வாங்க எப்படி போராடுகிறார் என்னும் நேர்த்தியான உணர்ச்சிபூர்வமான கதைக்களத்தில் கிடா படம் உருவாகியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு ஒரு கிடா வாங்கி தான் ஒரு முதலாளி ஆக வேண்டும் என்னும் கனவோடு திரியும் காளி வெங்கட். பூ ராம் மற்றும் காளி வெங்கட்-ன் பயணம் தான் கிடா படத்தின் கதை.