குடிமகன் இயக்குனர் சதீஸ்வரன் இயக்கத்தில் ஜெய்குமார், ஜெனிபர், பாலாசிங் நடிக்கும் சமூகத்தை சார்ந்த குடும்பத்திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளரும் இப்படத்தின் இயக்குனருமான சதீஸ்வரன் தயாரிக்க, இசையமைப்பாளர் எஸ்.எம்.பிரஷாந்த் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படமானது சமூகத்தில் குடிப்பவர்கள் நிம்மதியாக உறங்கி விடுகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தான் உறக்கம் போய்விடுகிறது என்கிற கருத்தினை அடிப்படையாக கொண்டு இயக்குநர் சத்தீஷ்வரன், தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படமாகும்.
கதை
ஒரு அழகான கிராமத்தில் வசிக்கும் விவசாய குடும்பத்தை சேர்ந்த தம்பதியினர் கந்தன், செல்லக்கண்ணு. இவர்களுக்கு ஆகாஷ் என்கிற 8 வயது மகன் உண்டு. தன் மகனின் மீது அதிக அன்பும், அக்கறையும் கொண்டு வளர்த்து வருகிறார் கந்தன். தீடிரென ஒரு மதுபானக் கடையினைக் கொண்டு வந்து பேரதிர்ச்சியைத் தருகிறார், அந்த ஊர் கவுன்சிலர். இதனால் பாதிக்கப்படுகிறார்கள் அந்த கிராம மக்கள்.
இதனை கண்டித்து அந்த ஊர் மக்கள், ஊர்த் தலைவரான அய்யா தலைமையில் போராட்டத்தில் இறங்குகிறார்கள். பிரச்சனை பெரிதாகும் நிலையில் ஊர் மக்களுடன் பேச்சுவார்த்தைக்கு வரும் காவல் துறையினர் ஒரு மாதம் காலகட்டத்திற்குள் மதுக்கடையினை மாற்றி விடுவதாக ஊர் மக்களிடம் உறுதியளிக்கிறார் கவுன்சிலர். பின்னர் நாட்கள் செல்ல செல்ல ஊரில் உள்ள ஆண்கள் குடி போதைக்கு அடிமையாகி நிற்கிறார்கள். இதனை கண்ட ஊர் கவுன்சிலர் நடப்பதை தனதாக்கி கொண்டு கடையை மாற்றாமல் இழுத்தடிக்கிறார். ஊர் தலைவரான அய்யா மட்டும் போராடிக் கொண்டிருக்கிறார்.
இப்படத்தின் நாயகனான கந்தனும் குடி போதைக்கு அடிமையாகி விடுகிறார். இதனால் கந்தனின் மனைவி செல்லக்கண்ணுவும், மகன் ஆகாஷும் பல கஷ்டங்களை சந்திக்கிறார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் க்ரோதம் தாங்க முடியாமல் செல்லக்கண்ணு யாரும் எதிர்பாராத ஒன்றினை செய்துவிடுகிறார். இதனால் ஒட்டுமொத்த கிராம மக்கள் அனைவரும் ஆதிர்ச்சிக்குள்ளாகிறார்கள்.
பின்னர் அய்யாவின் போராட்டம் வென்றதா?, செல்லக்கண்ணுவின் அந்த முடிவு என்ன?, கந்தன் குடியிலிருந்து மீண்டானா? என்பதை படத்தின் மீதிக்கதை