X
குடிமகன்

குடிமகன்

Drama | Social | 05 Apr 2019 | U | 125 Mins
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

குடிமகன் கதை

குடிமகன் இயக்குனர் சதீஸ்வரன் இயக்கத்தில் ஜெய்குமார், ஜெனிபர், பாலாசிங் நடிக்கும் சமூகத்தை சார்ந்த குடும்பத்திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளரும் இப்படத்தின் இயக்குனருமான சதீஸ்வரன் தயாரிக்க, இசையமைப்பாளர் எஸ்.எம்.பிரஷாந்த் இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது சமூகத்தில் குடிப்பவர்கள் நிம்மதியாக உறங்கி விடுகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தான் உறக்கம் போய்விடுகிறது என்கிற கருத்தினை அடிப்படையாக கொண்டு இயக்குநர் சத்தீஷ்வரன், தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படமாகும். கதை ஒரு அழகான கிராமத்தில் வசிக்கும் விவசாய குடும்பத்தை சேர்ந்த தம்பதியினர் கந்தன், செல்லக்கண்ணு. இவர்களுக்கு ஆகாஷ் என்கிற 8 வயது மகன் உண்டு. தன் மகனின் மீது அதிக அன்பும், அக்கறையும் கொண்டு வளர்த்து வருகிறார் கந்தன். தீடிரென ஒரு மதுபானக் கடையினைக் கொண்டு வந்து பேரதிர்ச்சியைத் தருகிறார், அந்த ஊர் கவுன்சிலர். இதனால் பாதிக்கப்படுகிறார்கள் அந்த கிராம மக்கள். இதனை கண்டித்து அந்த ஊர் மக்கள், ஊர்த் தலைவரான அய்யா தலைமையில் போராட்டத்தில் இறங்குகிறார்கள். பிரச்சனை பெரிதாகும் நிலையில் ஊர் மக்களுடன் பேச்சுவார்த்தைக்கு வரும் காவல் துறையினர் ஒரு மாதம் காலகட்டத்திற்குள் மதுக்கடையினை மாற்றி விடுவதாக ஊர் மக்களிடம் உறுதியளிக்கிறார் கவுன்சிலர். பின்னர் நாட்கள் செல்ல செல்ல ஊரில் உள்ள ஆண்கள் குடி போதைக்கு அடிமையாகி நிற்கிறார்கள். இதனை கண்ட ஊர் கவுன்சிலர் நடப்பதை தனதாக்கி கொண்டு கடையை மாற்றாமல் இழுத்தடிக்கிறார். ஊர் தலைவரான அய்யா மட்டும் போராடிக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் நாயகனான கந்தனும் குடி போதைக்கு அடிமையாகி விடுகிறார். இதனால் கந்தனின் மனைவி செல்லக்கண்ணுவும், மகன் ஆகாஷும் பல கஷ்டங்களை சந்திக்கிறார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் க்ரோதம் தாங்க முடியாமல் செல்லக்கண்ணு யாரும் எதிர்பாராத ஒன்றினை செய்துவிடுகிறார். இதனால் ஒட்டுமொத்த கிராம மக்கள் அனைவரும் ஆதிர்ச்சிக்குள்ளாகிறார்கள். பின்னர் அய்யாவின் போராட்டம் வென்றதா?, செல்லக்கண்ணுவின் அந்த முடிவு என்ன?, கந்தன் குடியிலிருந்து மீண்டானா? என்பதை படத்தின் மீதிக்கதை
Read More

குடிமகன் நடிகர்கள் & படக்குழுவினர்

குடிமகன் அணியின் தகவல்

இயக்குனர் சதீஸ்வரன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை எஸ்.எம்.பிரஷாந்த்
தயாரிப்பாளர் சதீஸ்வரன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

குடிமகன் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
தமிழ்நாட்டில் இன்று பல வீடுகளில் நாம் பார்க்கும் காட்சிகளை திரையில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சத்தீஸ்வரன். மது பழக்கம் ஒரு குடும்பத்தை எந்த அளவுக்கு சீரழிக்கிறது என்பதை மிகையில்லாமல் காட்டியிருக்கிறார். இதனால் அவசியமான ஒரு காலகட்டத்தில், மிகவும் அவசியமான ஒரு படமாக வந்துள்ளது குடிமகன். மதுவுக்கு எதிரான சில வசனங்கள் மிகவும் அழுத்தமாக உள்ளன. கந்தன் குடிகாரனான பிறகு, அவனது குடும்பம் படும் கஷ்டங்கள் நம்மை உருக வைக்கின்றன. படம் பார்த்து வெளியே வரும் குடிகாரர்கள், அன்றைய ஒரு நாளாவது குடிக்காமல் இருப்பது நிச்சயம். நாயகனாக நடித்துள்ள ஜெய்குமார், புதுமுகம் என்றாலும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு தகப்பனாக, கணவனான, குடிக்காரனாக தனது கடமையை சிறப்பாக செய்திருக்கிறார். படத்தின் மிகப் பெரிய சர்ப்ரைஸ் குட்டி பையன் ஆகாஷ். சமூக சேவைக்காக ஏற்கனவே அறியப்பட்ட இந்த சுட்டி பையன், திரையில் மதுவுக்கு எதிராக பிரச்சாரம் செய்து கலக்கியிருக்கிறான். சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்கிறான்.

குடிமகன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

குடிமகன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+